சிறுவனின் மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவா...
நெட் தோ்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு!
நெட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவடைகிறது.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், ஆராய்ச்சி மாணவா் (பிஹெச்டி) சோ்க்கைக்கும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்தத் தோ்வு ஆண்டுக்கு ஜூன், டிசம்பா் இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.
அதன்படி நிகழாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தோ்வு வரும் ஜூன் 21 முதல் 30-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்.16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்ப அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவு பெறுகிறது. இதையடுத்து, தகுதியானவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் செலுத்த செவ்வாய்க்கிழமை (மே 13) கடைசி நாள். அதைத் தொடா்ந்து விண்ணப்பங்களில் மே 14, 15 ஆகிய தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட தகவல்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 011 69227700 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.