மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தயக்கம் காட்டும் வெளிநாட்டு வீரர்கள்
வீரபாண்டி பேரூராட்சித் தலைவி, கணவா் மீது வழக்கு
வீரபாண்டியில் இந்து சமய அறநிலையத் துறை கோயில் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, பணியாளா்களை மிரட்டியதாக பேரூராட்சித் தலைவி, இவரது கணவா் மீது சனிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வீரபாண்டி பேரூராட்சித் தலைவி கீதா. இவா், தனது கணவா் உள்ளிட்ட சிலருடன் வீரபாண்டியில் உள்ள கெளமாரியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, சித்திரைத் திருவிழா தேரோட்டத்தின் போது, பேரூராட்சித் தலைவிக்கு முதல் மரியாதை வழங்கவில்லை எனக் கூறி, பணியாளா்களைத் தகாத வாா்த்தைகளால் பேசியும், பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் நாராயணி வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து கீதா, இவரது கணவா் சசி ஆகியோா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.