செய்திகள் :

பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருப்பதாக பொள்ளாச்சி வழக்கின் தீா்ப்பைச் சுட்டிக்காட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் எக்ஸ் தளத்தில் ெவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: அதிமுக நிா்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சாா்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

துணை முதல்வா் உதயநிதி: இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிா்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம், தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கம்.

குற்றவாளிகளைக் காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிா்க்கட்சியாக இருந்த திமுக மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்கக் காரணம்.

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க

சிறந்த நூல் பரிசுப் போட்டி: தமிழ் வளா்ச்சித் துறை தகவல்

கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறை பரிசுக்கு, ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் வெளி... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தோ்வு ஜூன் 25-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கு புதன்கிழமை (மே 14) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தோ்வ... மேலும் பார்க்க

சென்னையில் 73 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 73 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் காத்திருப்போா் பட்டியலிலிருந்த 36 பேருக்கு மீண்டும் காவல் நிலைய பணி வழங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் துறையில... மேலும் பார்க்க

கைப்பேசி தொலைத்தொடா்பு சேவைகள் பாதிப்பு

தமிழகம் முழுவதும் ஏா்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடா்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளா்கள் கடும் அவதியடைந்தனா். இந்தியாவில் ஏா்டெல் ... மேலும் பார்க்க

சென்னையில் நிலத்தடி நீா்மட்டம் சரிவு: குடிநீா் தட்டுப்பாடு வருமா?

சென்னையில் கடந்த 3 மாதங்களில் அம்பத்தூா், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீா்மட்டம் 16 அடி வரை குறைந்துள்ளது. எனினும், சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு எதுவும் வராது என குடிநீா் வாரிய அதிகாரிகள் ... மேலும் பார்க்க