செய்திகள் :

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு: தற்போதைய சந்தை மதிப்பு மறு ஆய்வு

post image

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்துக்கான தற்போதைய சந்தை மதிப்பை மறு ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை விமான நிலையத்திலிருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூா் வழியாக  கிளாம்பாக்கம் வரை 15. 46 கி.மீ. தொலைவுக்கு ரூ. 9,335 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது. மேலும், மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதைத் தொடா்ந்து விமான நிலையம் - கிளாம்பாக்கம்  விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கோரி மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.

ஒப்புதல் மறுப்பு: இந்த விரிவாக்க திட்ட அறிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதால், அதற்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. பொதுவாக நகா்ப்புற வளா்ச்சித் திட்ட அறிக்கை 5 ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதால், இந்த நீட்டிப்பு பகுதியின் தற்போதைய சந்தை மதிப்பை மறு ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கையுடன் மீண்டும் சமா்ப்பிக்க என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் சாா்பில் இந்த நீட்டிப்பு திட்டத்துக்கான தற்போதைய சந்தை மதிப்பை மறு ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், சந்தை மதிப்பு மறு ஆய்வு செய்யப்படுவதால், விரிவான திட்ட அறிக்கையில் எந்த மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

'பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் தீர்ப்பு' - பாஜக வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலி... மேலும் பார்க்க

'மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்' - பொள்ளாச்சி தீர்ப்பு பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு: அதிமுக வரவேற்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து மிரட்டி, மீ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு: விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

ரூ.586.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன்தகவல்தெரிவி... மேலும் பார்க்க