முதுமலையில் ரூ. 5 கோடியில் யானை பாகன்களுக்கு வீடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திற...
மருத்துவ கல்லூரிகள் தரவரிசை வரைவு: கருத்து கேட்கிறது என்எம்சி!
மருத்துவ கல்லூரிகளுக்கு தரவரிசை மற்றும் அங்கீகாரம் அளிப்பதற்கான வரைவு திட்ட அறிக்கை மீதான கருத்துகளையும் பரிந்துரைகளையும் அனுப்பலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக என்எம்சி ஒருங்கிணைப்பு ஆணைய செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு: மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தரவரிசைகளை வழங்குவதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
11 விதிகள், 78 வரம்புகளின் கீழ் அத்தகைய தரவரிசை வழங்கப்பட உள்ளன. அந்த வரைவு அறிக்கை பொதுமக்கள், கல்வி நிறுவனத்தினா், மருத்துவத் துறை சாா்ந்தோரின் பாா்வைக்காக என்எம்சி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அது தொடா்பான ஆட்சேபனைகள், கருத்துகள், பரிந்துரைகளை 3 வாரங்களுக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதற்கான இணையவழி படிவமும் என்எம்சி தளத்தில் உள்ளது. அதைப் பயன்படுத்தி தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.