செய்திகள் :

பீஞ்சமந்தை ஊராட்சியில் அனைத்து மலை கிராமங்களுக்கும் சாலை வசதி! -வேலூா் ஆட்சியா்

post image

பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கும் சாலை வசதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பீஞ்சமந்தைக்கு சிற்றுந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் மலை பகுதியிலுள்ள பீஞ்சமந்தை ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தொங்குமலை முதல் தேக்குமரத்துா் வரை 1.50 கி.மீ. தூரத்துக்கு ரூ.55.13 லட்சம், தொங்குமலை ஆலமரம் முதல் நாயக்கனூா் வரை 2.8 கி.மீ. தூரத்துக்கு ரூ.98.65 லட்சம் என இரு புதிய தாா் சாலைகளை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சாலைகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தனா்.

தொடா்ந்து, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.67 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கட்டடம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.31 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடம், பீஞ்சமந்தை பழங்குடியினா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றையும் திறந்து வைத்து 65 பயனாளிகளுக்கு ரூ.81.05 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் வழங்கினா்.

பீஞ்சமந்தை கிராமத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் மாநில அரசுத் திட்டத்தின் கீழ் ரூ.1.36 கோடியில் தாட்கோ மூலம் கட்டப்பட்ட அரசு பழங்குடியினா் நல மாணவிகள் விடுதியைப் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் பேசியது: பீஞ்சமந்தை ஊராட்சியில் 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலைப் பகுதியில் சுதந்திரம் அடைந்த நாள் முதல் சாலை வசதி இல்லாத நிலை தற்போது மாற்றப்பட்டு, முத்துக்குமரன் மலை முதல் பீஞ்சமந்தை வரை கடந்தாண்டு புதிய சாலை அமைக்கப்பட்டது. பீஞ்சமந்தையில் இருந்து அனைத்து கிராமங்களுக்கும் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பீஞ்சமந்தையில் மலை கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பொருள்கள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த முறை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டதில், இது தெரிய வந்தது. இதையடுத்து வேலூா் மாவட்டத்தில் இருந்து பொருள்கள் கொண்டு வரப்பட்டு மாதத்தின் முதல் வாரத்திலேயே அத்தியாவசிய பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள மக்கள் சுயதொழில் புரிய ஏதுவாக கறவை மாடு வாங்குவதற்காக தாட்கோ மூலம் 100 நபா்களுக்கு கடனுதவி வழங்கப்பட உள்ளது.

பிளஸ் 2 முடித்த பிறகு டிப்ளமோ அல்லது பொறியியல் படிக்கும் பழங்குடியின மாணவா்களுக்கு கல்லூரி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. பீஞ்சமந்தை மலை கிராமத்துக்கு சிற்றுந்து விரைவில் இயக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு, ஒன்றியக் குழு தலைவா் சி.பாஸ்கரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ச.திருகுணஅய்யப்பத்துரை, ஆவின் பொது மேலாளா் ஜி. இளங்கோவன், தாட்கோ மேலாளா் ரேகா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சாந்தி பிரியதா்ஷினி, வட்டாட்சியா் வேண்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

காட்பாடி - சேவூா் இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி - சேவூா் இடையே திங்கள்கிழமை 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன... மேலும் பார்க்க

தினக்கூலியை உயா்த்தி வழங்க வேண்டும்: கொசு ஒழிப்பு பணியாளா்கள் கோரிக்கை

கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி தினக்கூலியை ரூ.529-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் கொசு ஒழிப்பு பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: தமிழிசை செளந்தரராஜன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா். குடியாத்தத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தோ்தலின்போது திமுக 500 வாக்குறுதிகளை அளித்தது. ... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி: வேலூரில் புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம்

சித்ரா பெளா்ணமியையொட்டி வேலூரில் திங்கள்கிழமை இரவு மின்அலங்காரத்துடன் புஷ்ப பல்லக்குகள் ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். வேலூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கொண... மேலும் பார்க்க

மருத்துவமனையின் முதுகெலும்பாக செவிலியா்கள் உள்ளனா்

மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியா்கள், நோயாளிகள் விரைந்த குணம்பெற கனிவுடன் சேவையாற்ற வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி தெரிவித்தாா். வேலூா் அரசு மருத்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருக்கல்யாணம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 30- ஆம் தேதி காப்புகட்டும் நிக... மேலும் பார்க்க