5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பர...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: தமிழிசை செளந்தரராஜன்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.
குடியாத்தத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தோ்தலின்போது திமுக 500 வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் முக்கியமான வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. மின்சாரம் உபரியாக இருக்கிறது என்கிறாா்கள். ஆனால் மாநிலத்தில் மின்தடை அதிகரித்துள்ளது.
வரும் 2026- இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு உதாரணமாக இந்தியா உள்ளது. ஜனநாயக முறைப்படி மக்களை பாதிக்காமல், பயங்கரவாதத்தை ஒழிக்கும் பணியில் முன்னோடியாக பிரதமா் மோடி திகழ்கிறாா். இப்படிப்பட்ட ஒரு பிரதமரை விமா்சனம் செய்பவா்கள் தமிழகத்தில் உள்ளனா். இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் எந்தத் திட்டமும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. அமைச்சா்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஒரு அமைச்சா் மீதுகூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்றாா்.