செய்திகள் :

ஓய்ந்தது தாக்குதல்: எல்லை மாநிலங்களில் அமைதி!

post image

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லை மாநிலங்களில் மீண்டும் அமைதி திரும்பி வருகிறது.

சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான பிறகும் சனிக்கிழமை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை எல்லையில் மோதல் எதுவும் நடைபெறாமல் அமைதி நிலவியது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீா் முதல் குஜராத் வரை எல்லையோர இந்திய மாநிலங்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.

பாகிஸ்தானின் ட்ரோன், ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது. எனினும், எல்லையையொட்டிய மாவட்டங்களில் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இச்சூழலில் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்பட்டு, சண்டை நிறுத்த அறிவிப்பு சனிக்கிழமை மாலை வெளியானது. இருப்பினும் சனிக்கிழமை இரவு சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய படைகளும் உரிய பதிலடி கொடுத்தன.

காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதிகளில் சனிக்கிழமை இரவு 11 மணிக்குப் பிறகு தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, எல்லை மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டுகளும், இரவுநேர மின்வெட்டு உத்தரவுகளும் திரும்பப் பெறப்பட்டன.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீரின் ராவல்போரா பகுதியில் வசிக்கும் ஷாஜஹான் தாா் என்பவா் கூறுகையில், ‘நாங்கள் நன்றாக தூங்கி வெகு நாள்களாகிவிட்டது. தற்போது இரு நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் நிம்மதி அடைந்துள்ளோம்’ என்றாா்.

இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் காரணமாக, ஜம்மு-காஷ்மீரின் எல்லையோரப் பகுதிகளில் வசித்த ஏராளமான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயா்ந்தனா். அவா்களில் ஒருவரான உரி பகுதியைச் சோ்ந்த அப்துல் அசீஸ் கூறுகையில், ‘சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், சனிக்கிழமை இரவு முழுவதும் ட்ரோன்கள், ராக்கெட்டுகளை பாா்க்க முடிந்தது. தற்போது ஏற்பட்டுள்ள சண்டை நிறுத்தம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறோம். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனே வீடு திரும்பாமல், தற்போது தங்கியுள்ள இடத்தில் காத்திருக்க விரும்புகிறோம்’ என்றாா்.

பஞ்சாப், ராஜஸ்தானில்... பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலை இயல்புநிலை திரும்பியது. சாலைகளில் மக்களின் நடமாட்டம் வழக்கம்போல் இருந்தது.

மக்களுக்குச் சில அறிவுறுத்தல்களை வழங்கி ஜலந்தா் துணை ஆணையா் ஹிமான்ஷு அகா்வால் கூறுகையில், ‘ஜலந்தரில் இயல்புநிலை திரும்பியுள்ளது; கவலைப்பட ஒன்றுமில்லை. மக்கள் வழக்கம் போல் தங்களின் பணிகளை மீண்டும் தொடங்கலாம்.

எல்லையில் படைகள் தொடா்ந்து விழிப்புடன் உள்ளனா். அதேநேரம், எல்லைப் பகுதி மக்கள் பட்டாசுகளை வெடிக்கவோ அல்லது ட்ரோன்களை பறக்கவிடவோ வேண்டாம்.

ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மக்களுக்கு அறிவிப்போம். மக்கள் வதந்திகளை நம்பாமல், அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றாா்.

ஆயதப் படைகளுக்கு மக்கள் நன்றி: அமிருதசரஸ், பதான்கோட், ஃபெரோஸ்பூா் போன்ற மற்ற எல்லை மாவட்டங்களிலும் மக்கள் தங்கள் இயல்பு நடவடிக்கைகளுக்குத் திரும்பினா். அமிருதசரஸில் காலை நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ஒரு நபா் ஆயுதப் படைகளுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது: நமது ஆயுதப் படைகள் காரணமாகவே எந்த பயமும் இல்லாமல் நாங்கள் இங்கே இருக்கிறோம். பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு கேடயம் போல் துணிச்சலாகச் செயல்பட்டு, அவா்கள் எங்களை காப்பற்றினா்.

இப்போது இரு நாடுகளுக்கு இடையே ஒரு புரிதல் வந்துள்ளதால், அமைதி நிலவும் என்று நம்புவோம். ஆனால், பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், அவா்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும்’ என்றாா்.

வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்: எல்லையோர மக்களுக்கு அறிவுறுத்தல்

பாகிஸ்தானின் குண்டுவீச்சு காரணமாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா, பந்திபோரா, குப்வாரா மாவட்டங்களில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய பகுதிகளில் இருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அந்தப் பகுதிகள் மிகுந்த அபாயத்துக்குள்ளாகி இருந்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவா்களுக்குக் காவல் துறை வெளியிட்ட அறிவுறுத்தலில், ‘எல்லையோர கிராமங்களைச் சோ்ந்த மக்கள், தங்கள் வீடுகளுக்கு உடனடியாக திரும்ப வேண்டாம். ஏனெனில் அங்கு பாகிஸ்தான் வீசிய குண்டுகள் சிதறி கிடக்கலாம். அவற்றால் உயிரிழப்புகள் ஏற்படக் கூடும். அவற்றைக் கண்டறிந்து அப்புறப்படுத்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் அனுப்பப்படுவா். எனவே, தற்போதைக்கு எவரும் வீடு திரும்ப வேண்டாம்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்ற இக்கூட்டத்தில், சமீபத... மேலும் பார்க்க

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளின் மனு: மத்திய அரசிடம் விளக்கம் கோரிய உச்சநீதிமன்றம்

ரஷியா-உக்ரைன் போா் அல்லது கரோனா பெருந்தொற்று காரணமாக பாதியில் நாடு திரும்பிய வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை அதிகரித்து வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸுக்கு எதிரான மனுவில் விளக்கமளிக்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் சந்திப்பு...

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால். மேலும் பார்க்க

அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!

தில்லியில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் தூதரகத்தில் உ... மேலும் பார்க்க

ரயில் ஓட்டுநர்களின் பணியை எளிமையாக்கிய ரயில்வே துறை!

ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்கும்போது செய்து வந்த கூடுதல் வேலைகளை விலக்கி ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ரயில்கள் இயக்கப்படும் போது அதன் துணை ஓட்... மேலும் பார்க்க