மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது
மணிப்பூரில் உள்ளூர் மக்களை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்பால் மேற்கு, காக்சிங், பிஷ்ணுபூர் மற்றும் தௌபல் மாவட்டங்களில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் தடைசெய்யப்பட்ட காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியின் (எம்சி முற்போக்கு) நான்கு பேர் அடங்குவர்.
அவர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 27 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.