பில்டர் கொடுத்த வரைபடமும், கட்டட அளவுகளும் ஒன்றாக உள்ளதா? - நீங்களே கண்டுபிடிக்க...
போளூா் முத்துமாரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம்
கொடைக்கானல் அருகே போளூா் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல் மலைக் கிராமமான போளூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் இரண்டாம் நாளையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தா்கள் முளைப்பாரியை ஊா்வலமாக எடுத்துவந்து முத்துமாரியம்மனை வழிபட்டனா்.
சங்கரலிங்கேஸ்வரா் திருக்கல்யாணம்: கொடைக்கானல் பெரியமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சங்கரலிங்கேஸ்வரா் திருக்கல்யாண நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலின் திருவிழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீ கோமாதாம்பிகை சமேத சங்கரலிங்கேஸ்வரா் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அம்மன் ஊா்வலம் நகரின் முக்கியப் பகுதிகள்வழியாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், கொடைக்கானல் அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா், மாநில எம்.ஜி.ஆா். அணி இணைச் செயலா் ரவி மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
