செய்திகள் :

கணவன் - மனைவி ரெண்டு பேருமே சம்பாதிக்கிறீங்க... ஆனாலும் பணம் பத்தி கவலையா? #LabhamWebinar

post image

நீங்க சம்பாதிக்கிறீங்க. உங்க கணவன்/மனைவியும் சம்பாதிக்கிறாங்க. யோசிச்சு பார்த்தா, பொருளாதாரத்தை பொறுத்தவரை உங்க வாழ்க்கை ரொம்ப ஈஸியா போகுது. ஆனா இந்த நிலை எப்போதுமே நீடிக்குமா?

ஒருத்தர் பண நிர்வாகம் பற்றிய பேச்சை எடுத்தா, இன்னொருத்தர் அதுக்கெல்லாம் டைம் இல்ல, இல்லைனா நீயே பார்த்துக்கோன்னு சொல்லுற வீடா? சேவிங்ஸ் அக்கவுண்ட்ல இருக்கும் பணம் சில நேரம் போதும்னும், சில நேரம் இன்னும் கொஞ்சம் இருக்கலாமேன்னும் தோணுதா?

வெபினார் வழிகாட்டி
வெபினார் வழிகாட்டி

50 வயசிலேயே ரிட்டையர் ஆக ஆசைதான், ஆனா நெனச்சா கொஞ்சம் சிரிப்புதான் வருது இல்லையா? கணவன்/மனைவி ரெண்டு பேரும் வேலை வேலைன்னு ஓடுறீங்க, ஆனா நீங்க நினைச்ச வாழ்க்கை இன்னும் கிடைக்கல. சரி இதுக்கு என்னதாங்க தீர்வு?

உங்களுக்கு பணம் ஒரு பிரச்னை கிடையாது. சரியான வழிகாட்டல் இல்லாமல் இருப்பதே உங்களின் பிரச்னை. உங்களை மாதிரி 30 அல்லது 40 வயதுகளில் வேலைக்குச் செல்லும் தம்பதிகளுக்கு பிரச்னை கையில் காசு இல்லாமல் இருப்பது இல்ல, பண நிர்வாகத்தில் தெளிவு இல்லாமல் இருப்பதே!

உங்களுக்கு பணம் ஒரு பிரச்னை கிடையாது. சரியான வழிகாட்டல் இல்லாமல் இருப்பதே உங்களின் பிரச்னை. உங்களை மாதிரி 30 அல்லது 40 வயதுகளில் வேலைக்குச் செல்லும் தம்பதிகளுக்கு பிரச்னை கையில் காசு இல்லாமல் இருப்பது இல்ல, பண நிர்வாகத்தில் தெளிவு இல்லாமல் இருப்பதே!

எதை எதையோ கத்துக்குறீங்க, இதைக் கத்துக்கிட்டீங்களா?

பொதுவாவே நம்ம சமூகத்தில் பணத்தை எப்படி சரியா நிர்வாகம் பண்ணனும்னு சொல்லித் தர்றதில்ல. அப்படிச் சொன்னாலும் சிக்கனமா இரு, கொஞ்சம் சேர்த்து வை. வீடு வாங்கு இல்லைனா தங்கம் வாங்கு - இவ்ளோதான் பணம் பற்றி நம்முடைய புரிதல். திருமணம் ஆன புதிதிலேயே இருவரின் வருமானத்தையும் சேர்த்து எப்படி, யார், எந்தெந்த முறைகள் மூலம் நிர்வாகம் பண்ணப்போறோம் அப்படிங்கிற தெளிவு தம்பதியரிடம் இருக்கணும், இல்லைனா வரும் பணம் பின் வாசல் வழியா வந்த வேகத்தில் போயிரும், பின் கடன் சுமைதான் அதிகரிக்கும்!

பெரும்பாலும் கணவன் மனைவி இருவரில், ஒருத்தவங்க சேமிப்பவராகவும் இன்னொருத்தர் செலவு செய்யுறவங்களாகவும் இருப்பீங்க. சம்பளம் சரியாத்தான் நிர்வகிக்கப்பட்டு வருதுன்னு நினைச்சுட்டு அவங்கவங்க வேலைகளைப் பார்த்துட்டு இருப்பீங்க.

பணம்
பணம்

ஆனா திடீர் பணத் தேவைகள் வரும்போதுதான் நாம் செய்யும் தவறுகள் நமக்குப் புலப்படும். இந்தத் திடீர் அதிர்ச்சியை சமாளிக்கணும்னா உங்களுக்கு தேவை ஒரு முறையான 'ஃபினான்ஷியல் பிளான்'.

பண நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் தம்பதிகள்கிட்ட இருக்கும் முக்கிய குணம் அவங்ககிட்ட பண விஷயத்தில் ஈகோ இருக்காது. யார் அதிகம் சம்பாதிக்கிறா-ங்கிற ஈகோவை எல்லாம் விட்டுட்டு இருவரின் வருமானமும் குடும்ப வருமானம்னு கருதுவாங்க. அதற்கு இருவருமே பொறுப்பும் எடுத்துப்பாங்க. எந்தவொரு செலவையும் மறைக்க மாட்டாங்க. பட்ஜெட் போடுவதை ஒருத்தவங்க மத்தவங்க கிட்ட தள்ளாம, ஒவ்வொரு மாதமும் 1 மணி நேரமாவது இதற்கு செலவிடுவாங்க. இது அவர்களுக்குள்ள நல்ல புரிதலை ஏற்படுத்தி, மண வாழ்க்கையையும் சிறப்பாக்குது!

பேசுங்க, பிளான் பண்ணுங்க, இலக்கு வையுங்க...

மாத வரவு செலவு என்ன? குழந்தைகளின் வருங்காலத்தை எப்படி பார்த்துக்கப் போறோம்? எமெர்ஜென்சி பணத்தை உருவாக்குவது எப்படி? வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர்வது எப்படி? எந்த வயசில் ரிட்டையர் ஆகலாம்? இதையெல்லாம் கண்டிப்பா தம்பதிகள் கலந்து பேசணும். குறிப்பா மாதச் செலவுகளை குறிச்சு வைச்சு எங்க எவ்ளோ பணம் செலவாகுதுன்னு இருவருக்குமே தெரியணும். இப்படி செய்யலைன்னா நீங்க உங்க பணத்துக்கு பொறுப்பு எடுத்துக்கலைன்னு அர்த்தம். 

பணம்
பணம்

வீடு கட்டணுமா? குழந்தைகளின் மேற்படிப்பா? ரிட்டைர்மெண்டா? எல்லாத்துக்கும் ஒரு பண இலக்கு இருக்கு. அதைப் பிளான் பண்ணி, அந்த இலக்கை நோக்கி அடியெடுத்து வைப்பதில்தான் சூட்சுமமே இருக்கு!

கொஞ்சம் யோசிச்சு பாருங்க, உங்களின் 43 வயசுல மாசாமாசம் 50,000 ரூபாய் உங்க அக்கவுண்ட்ல வந்து விழுந்தா எப்படி இருக்கும்? நீங்க 27-28 வயசுல முதலீடுகள் பற்றி பிளான் பண்ணியிருந்தா, இந்நேரம் அது சாத்தியம் ஆகியிருக்கும். நீங்க 30-களில் இருக்கும் தம்பதியா? இப்போலேர்ந்து ஸ்டார்ட் பண்ண ஆரம்பிங்க, நீங்களும் இதைக் கண்டிப்பா அடையலாம்!

விகடன் லாபம் வழங்கும் தம்பதிகளுக்கான வெபினார்

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போறீங்களா? பட்ஜெட் முதல் ரிட்டைர்மென்ட் வரை எல்லா விஷயங்களின் அடிப்படைகளையும் தெரிஞ்சுக்கணுமா? முதலீடுகள் மூலம் சீக்கிரமா ரிட்டயர் ஆகி நீங்க நெனச்ச மாதிரி சந்தோஷமா வாழணுமா?

விகடன் லாபம் வழங்கும் 'இரட்டைச் சம்பளம்; ஒற்றைக் கனவு' - தம்பதிகளுக்கான ஸ்பெஷல் வெபினாரை மிஸ் பண்ணிடாதீங்க!

நடைபெறும் நாள்: மே 18, 2025, ஞாயிறு

நேரம்: காலை 11 மணி (இந்திய நேரம்)

பேச்சாளர்கள்: J. அசோக், மேனேஜிங் பார்ட்னர், ஆர்.பி மணி மேட்ரிக்ஸ் & ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்

வெபினாரில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். (80 காலி இடங்கள் மட்டுமே உள்ளன)

ரெஜிஸ்டர் செய்ய, லிங்க் க்ளிக் செய்யவும்: https://forms.gle/JMGjkdgBTJRjkwYy8

Labham: சிங்கப்பூர் & மலேசியாவில் வசிக்கிறீங்களா? உங்க வருங்காலம் பணக் கஷ்டம் இல்லாம இருக்கணுமா?

நீங்க இந்தியாவை விட்டுக் கிளம்பும்போது பெருங்கனவுகளோட அந்த ஃபிளைட்டில் ஏறி இருப்பீங்க! இப்போ அந்தக் கனவு பலிக்கவும் ஆர்மபிச்சு இருக்கும். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வாழும் நீங்க இப்போ நிம்மதியா இ... மேலும் பார்க்க

60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

கிட்டத்தட்ட 20 வருடங்களாநீங்க நல்லா உழைச்சாச்சு! கொஞ்சம் காசும் சேர்த்து வச்சுட்டீங்க. சிலர் வீடும்வாங்கியிருப்பீங்க, அதுக்கு சிலர் இ.எம்.ஐ-யும் கட்டிட்டு இருப்பீங்க. ஒருபக்கம்குழந்தைகளின் படிப்பும்போ... மேலும் பார்க்க

கைநிறைய சம்பாதிக்கிறீங்களா? 40 வயதில் ரிட்டையர் ஆகி நீங்க நெனச்ச மாதிரி வாழணுமா?

நீங்க 30 வயசுலேயே ஒரு லட்ச ரூபாய்க்கும்மேலசம்பளம் வாங்குபவரா? வாழ்த்துகள். இது உங்கதிறமைக்கும்உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரம். வாழ்க்கை சூப்பரா போயிட்டு இருக்கு இல்லையா? இப்போதான்நீங்க சில முக்கியமான... மேலும் பார்க்க

ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ் உங்க கையைக் கடிக்குதா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

ஒவ்வொரு வருஷமும்பசங்களோட ஸ்கூல்/காலேஜ் ஃபீஸ்க்கானதேதி வர்றப்போ ஒரே ஷாக்கா இருக்கா? வயித்துல புளியைக்கரைக்குதா? நாம எப்படி ஃபீல்பண்ணாலும்சரி, அது வருஷாவருஷம் தொடர்ந்து வரக்கூடிய செலவுதான். பெற்றோர்கள் ... மேலும் பார்க்க

Insurance: காப்பீடும் முதலீடும்; ஒரு நிமிஷம்! இன்ஷூரன்ஸ் எடுக்க போறீங்களா? எடுத்தாச்சா? இதைப் படிங்க

தலைக்கு தலைக்கவசம், வாழ்க்கைக்கு இன்ஷூரன்ஸ்! தலைக்கவசம் எப்படி நம் உயிரைக்காக்குதோஅதேமாதிரிநம் உடல் நலம் பாதிக்கப்பட்டாமருத்துவ காப்பீடும், நாம் உயிரிழந்தாநம்ம குடும்பத்தை ஆயுள் காப்பீடும் காக்கும். அ... மேலும் பார்க்க