செய்திகள் :

பில்டர் கொடுத்த வரைபடமும், கட்டட அளவுகளும் ஒன்றாக உள்ளதா? - நீங்களே கண்டுபிடிக்கலாம்!

post image

புதிதாக ஒரு வீடு வாங்கப்போகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நம் கைகளில் அந்த வீட்டின் அளவுகள் (Approved Building Plan) கொண்ட வரைபடத்தைத் தருவார்கள்.

அதில் நாம் வாங்கப்போகும் வீட்டின் அகலம் எவ்வளவு, நீளம் எவ்வளவு என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

வரைபடத்தில் உள்ள அதே நீள, அகலம் கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படுகிற வீட்டில் இருக்கிறதா என்பதைச் செக் செய்ய நாம் எந்த இன்ஜினீயரிடமும் போக வேண்டாம். நாமே கணக்கிட்டுக்கொள்ளலாம் என்கிறார் தமிழ்நாடு ஃபிளாட் புரொமோட்டர்ஸ் சங்கத்தின் தலைவர் பி. மணிசங்கர்.
தமிழ்நாடு ஃபிளாட் புரொமோட்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.மணிசங்கர்
தமிழ்நாடு ஃபிளாட் புரொமோட்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.மணிசங்கர்

அது எப்படி?

ஒரு பிளாட் அல்லது வீடு வாங்கும்போது, அறைகள் இவ்வளவு அளவு இருக்கிறது, படிகள் இந்த அளவு இருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருப்பார்கள். அது சரியாக இருக்கிறதா அல்லது அந்தக் கட்டடத்தில் வரைபட மீறல் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள, வீடு வாங்குவதற்கு முன்பு நாமே அளந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அதற்கு ஒரு துணி அளவிடும் டேப் மற்றும் இரண்டு உதவியாளர்கள் இருந்தால் போதும்.

அளப்பதற்கு முன்பு...

வீட்டை அளப்பதற்கு முன்பு, சென்டிமீட்டர், அடி, இன்ச் ஆகியவற்றை மீட்டராக மாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். காரணம், வரைபடங்களில் மீட்டரில் மட்டுமே அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். எனவே, சென்டிமீட்டர், இன்ச், அடி ஆகியவற்றை மீட்டராக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும்.

என்னென்ன அளக்க வேண்டும்?

  • அருகில் இருக்கும் காலி இடத்தில் செட் பேக் ஏரியா சரியாக உள்ளதா?

  • வெளிப்புறப் பரப்பு இருக்கிறதா?

  • அறையின் நீளம், அகலம் சரியாக இருக்கிறதா?

  • படிகளின் அளவு எவ்வளவு?

  • கட்டடத்தின் சுற்றளவு சுவர் எவ்வளவு?

  • பார்க்கிங் பரப்பு எவ்வளவு? ஹெட்ரூம் உயரம் எவ்வளவு?

    நீங்கள் அளந்த அளவுகளையும், வரைபடத்தில் உள்ள அளவுகளையும் ஒப்பிட்டு, அவை சரியாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

கட்டடம்
கட்டடம்

இவைகளையும் செக் செய்யுங்கள்...

வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் ஈ.பி. ரூம் (மின்சார அறை) இருக்கிறதா என்பதை உறுதிசெய்யுங்கள்.

வரைபடம் எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைப் பாருங்கள். ஒரு வரைபடம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்கு மேல் கட்டட வேலை தொடர்ந்தால், அந்த வரைபடம் செல்லாது. இதை முக்கியமாகக் கவனியுங்கள்.

இல்லையென்றால்...

ஒருவேளை கட்டடத்தின் கால அளவு மீறப்பட்டிருந்தால், பில்டர்கள் நிறைவு சான்றிதழ் (Completion Certificate) வாங்கித் தர வேண்டும்.

அப்படி இல்லையென்றால், நீங்கள் பில்டர்களுக்கு செலுத்திய பணத்தை அவர்கள் வங்கி வட்டியுடன் (வங்கி விகிதப்படி) திருப்பித் தர வேண்டும்.

ஏன் இது அவசியம்?

வரைபட அளவுகளும், கட்டட அளவுகளும் மாறியிருந்தால், அது சட்ட மீறலாகும்.

அதனால்...

கட்டடத்துக்கு அபராதம் விதிக்கப்படலாம். கட்டடம் இடிக்கப்படலாம். கட்டடத்தைப் பதிவு செய்வதிலோ, விற்பதிலோ பிரச்னைகள் எழலாம்". என்கிறார். சின்ன விஷயம் தான். ஆனால் முறையாக செய்யவில்லை எனில் சிக்கல் தான்!.

Taj Sky view: சென்னையில் சொகுசு குடியிருப்புகளுடன் கூடிய 5 ஸ்டார் தாஜ் ஹோட்டல் அறிமுகம்!

5 ஸ்டார் ஹோட்டல் என்றதும் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது நூறு ஆண்டுக்கும் மேலாக பழமையான தாஜ் ஹோட்டல் தான். அந்த அளவுக்கு இந்தியாவின் மிக முக்கியமான அடையாளமாக விளங்கும் இந்த தாஜ் ஹோட்டல் மிக பெரிய... மேலும் பார்க்க

'புதிதாக வீடு கட்டலாமா, வாங்கலாமா?' - எது பெஸ்ட் சாய்ஸ்?

வீடு என்பது அனைவருக்குமான கனவு. அது கிடைத்துவிட்டாலே, 'லைஃப் டைம் செட்டில்மென்ட்' என்பது தான் பலரின் மனநிலை. இப்படிப்பட்ட வீட்டை 'கட்டலாமா?' அல்லது 'வாங்கி விடலாமா?' என்று பலருக்கும் குழப்பம் இருக்கும... மேலும் பார்க்க

DRA: ₹525 கோடி வருவாயுடன் ரியல் எஸ்டேட் துறையில் பெரு நிறுவனமாக உருவெடுக்கும் டிஆர்ஏ

சென்னையின் வளர்ச்சி வரலாற்றை மறுவரையறை செய்யும் ஒரு சிறப்பான சாதனையாக நிதியாண்டு 2024-25-ல் பிரமிக்கத்தக்கவாறு ₹525 கோடி வருவாயுடன் ₹500 கோடி கிளப்பில் டிஆர்ஏநுழைந்திருக்கிறது. இந்த மைல்கல்லை இம்மாநகர... மேலும் பார்க்க

உங்கள் வீட்டின் முன்பக்க லுக் சூப்பராக இருக்க வேண்டுமா?! - இதைச் செய்யுங்கள்!

வீட்டிற்குள் இவ்வளவு அறைகள், இன்டீரியர் டெக்கரேஷன், அழகழகான மின்விளக்குகள் என எவ்வளவு பார்த்து பார்த்து செய்தாலும், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நமது வீட்டின் அழகை பறைசாற்றுவது எலிவேஷன் தான். அத... மேலும் பார்க்க

வீட்டில் எந்தெந்த அறை எப்படி, எத்தனை அடியில் இருக்க வேண்டும்? - சொந்த வீடு கட்ட நிபுணர் டிப்ஸ்!

வீடு கட்டுவது முடிவாகிவிட்டது என்றால் அடுத்தது என்ன பிளானிங் தான். ஒவ்வொரு அறையும் இப்படி இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து முடிவுகளை செய்வோம். இந்த முடிவுகளை நீங்கள் எளிதாக எடுக்க நிபுணரின் டிப... மேலும் பார்க்க