செய்திகள் :

'புதிதாக வீடு கட்டலாமா, வாங்கலாமா?' - எது பெஸ்ட் சாய்ஸ்?

post image

வீடு என்பது அனைவருக்குமான கனவு. அது கிடைத்துவிட்டாலே, 'லைஃப் டைம் செட்டில்மென்ட்' என்பது தான் பலரின் மனநிலை.

இப்படிப்பட்ட வீட்டை 'கட்டலாமா?' அல்லது 'வாங்கி விடலாமா?' என்று பலருக்கும் குழப்பம் இருக்கும். இந்தக் குழப்பத்திற்கான விடையை தருகிறார் தமிழ்நாடு ஃபிளாட் புரொமோட்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.மணிசங்கர்.

வாங்கும் வீட்டின் ப்ளஸ்கள்

நீங்கள் காசு கொடுத்த உடனேயே, உங்கள் கைக்கு வீடு வந்துவிடும். அதனால், மேலும், வாடகைகள் கட்ட வேண்டியதாக இருக்காது. ஒருவேளை இ.எம்.ஐ கட்ட நேர்ந்தாலும், 'சொந்த வீடு இருக்கிறது' என்பது நமக்கு பெரும் நிம்மதி.

தமிழ்நாடு ஃபிளாட் புரொமோட்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.மணிசங்கர்
தமிழ்நாடு ஃபிளாட் புரொமோட்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.மணிசங்கர்

வீடு கட்டும்போது, 'சொன்ன நேரத்திற்கு வீடு கட்டி முடிக்கப்படவில்லை' என்றால் பெரும் பிரச்னை. இந்தப் பிரச்னையை வீடு வாங்கும்போது தடுத்துவிடலாம்.

வீடு கட்ட வீட்டுக்கடன் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். முதல் 50 சதவிகித தொகையை முதலிலேயே பில்டருக்குத் தந்துவிடுவோம். அந்த 50 சதவிகிதத்திற்கு வீடு கட்டத் தொடங்குவதில் இருந்தே வட்டி கட்ட தொடங்க வேண்டும். பின்னர், மொத்த தொகை கிடைத்த உடன் அதற்கான இ.எம்.ஐ கட்ட வேண்டும். ஆனால், வீடு வாங்கும்போது, கடன் வாங்கிய தொகையை அப்படியே வீட்டிற்கு கொடுத்துவிட்டு, அதற்கான வட்டியை மட்டும் கட்டினால்போதும்.

'பட்ஜெட் இவ்வளவு தான்' என்கிற தடை இருப்பவர்களுக்கு 'உங்கள் பட்ஜெட்டிற்குள்' வீடு வாங்குவது தான் சிறந்தது.

'வீடு அவசரமாகத் தேவை' என்பவர்களுக்கும் வீடு வாங்குவது தான் சிறந்த சாய்ஸ்.

கட்டும் வீட்டின் ப்ளஸ்கள்

எத்தனை அறைகள், என்ன கட்டடப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, எதற்கு எவ்வளவு இடம் போன்றவற்றை நாம் நிர்ணயிக்கலாம்.

பெயிண்ட் முதல் டைல்ஸ் வரை நம் விருப்பப்படி தேர்ந்தெடுத்து வீட்டைக் கட்டலாம். வேண்டுமென்கிற மாற்றங்களை செய்துகொள்ளலாம்.

வீடு கட்டும்போது நம் சொந்தக்காரர்கள், தெரிந்தவர்களிடம் சொல்லுவோம். அப்போது அவர்கள் நாம் கட்டுகின்ற வீட்டைப் பார்க்கும்போது மேற்பார்வையிடுவார்கள். இதற்கு 'Third Eye' என்று பெயர். இதன் மூலம் நமக்கு புதுப்புது ஆலோசனைகளும், ஐடியாக்களும் கிடைக்கும்.

பிளான் போட்டப்பிறகு, நமக்கு தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

நம் மேற்பார்வை இருக்கும். அதனால், அந்தக் கட்டடத்தில் தரமான பொருட்கள் பயன்படுத்தப்படும், தரமான வேலைகள் இருக்கும்.

சொந்த வீடு...
சொந்த வீடு...

நமது உயரம், சௌகரியத்திற்கு ஏற்ப, வீட்டை அமைக்கலாம்.

எலெக்ட்ரிக் வயர்கள், எத்தனை ஸ்விட்ச்சுகள் வேண்டும், எங்கே வேண்டும் போன்ற வேலைப்பாடுகளை நமக்கு ஏற்ற மாதிரி செய்வதற்கான சாய்ஸ் உண்டு. ஆனால், கட்டி முடித்த வீட்டை வாங்கும்போது, நாம் கையில் இருக்கும் காசைப் போட்டு வாங்க வேண்டியதாக இருக்கும். இந்த வேலைபாடுகளை மறைக்க முடியாது. அதனால், இது வீட்டின் அழகைக் கெடுக்கும் மற்றும் கூடுதலாக நமக்கு செலவை இழுத்துவிடும்.

வெதரிங் கோர்ஸ் போன்றவற்றை நாம் பார்த்து பார்த்து செய்து, நம் வீட்டை நமக்கு சௌகரியமானதாக மாற்றலாம்.

இந்த இரண்டு ப்ளஸ்களையும் ஆராய்ந்து பார்த்தால், கொஞ்சம் பட்ஜெட் அதிகமானாலும் வீடு கட்டுவது தான் நல்ல ஆப்ஷன். ஆனால், இதிலும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டைக் கட்டலாம், வாங்கலாம்". என்றார்

DRA: ₹525 கோடி வருவாயுடன் ரியல் எஸ்டேட் துறையில் பெரு நிறுவனமாக உருவெடுக்கும் டிஆர்ஏ

சென்னையின் வளர்ச்சி வரலாற்றை மறுவரையறை செய்யும் ஒரு சிறப்பான சாதனையாக நிதியாண்டு 2024-25-ல் பிரமிக்கத்தக்கவாறு ₹525 கோடி வருவாயுடன் ₹500 கோடி கிளப்பில் டிஆர்ஏநுழைந்திருக்கிறது. இந்த மைல்கல்லை இம்மாநகர... மேலும் பார்க்க

உங்கள் வீட்டின் முன்பக்க லுக் சூப்பராக இருக்க வேண்டுமா?! - இதைச் செய்யுங்கள்!

வீட்டிற்குள் இவ்வளவு அறைகள், இன்டீரியர் டெக்கரேஷன், அழகழகான மின்விளக்குகள் என எவ்வளவு பார்த்து பார்த்து செய்தாலும், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நமது வீட்டின் அழகை பறைசாற்றுவது எலிவேஷன் தான். அத... மேலும் பார்க்க

வீட்டில் எந்தெந்த அறை எப்படி, எத்தனை அடியில் இருக்க வேண்டும்? - சொந்த வீடு கட்ட நிபுணர் டிப்ஸ்!

வீடு கட்டுவது முடிவாகிவிட்டது என்றால் அடுத்தது என்ன பிளானிங் தான். ஒவ்வொரு அறையும் இப்படி இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து முடிவுகளை செய்வோம். இந்த முடிவுகளை நீங்கள் எளிதாக எடுக்க நிபுணரின் டிப... மேலும் பார்க்க

சொந்த வீடு கட்ட போறீங்களா? உங்கள் பட்ஜெட்டில் கடைபிடிக்க வேண்டிய `13' கோல்டன் ரூல்ஸ்!

'வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணத்தை செஞ்சு பாரு' என்ற சொலவடையை நிச்சயம் நாம் கடக்காமல் இருந்திருக்க மாட்டோம். இந்த சொலவடையில் அவர்கள் முக்கியமாக கூறுவது 'பட்ஜெட்டை' தான்.வீடு கட்டப்போகிறோம் என்று ஆகிவிட... மேலும் பார்க்க

Real Estate: 'வீட்டின் அருகில் இருக்கும் சாலை 'இந்த' மீட்டரில் இருக்கிறதா?' - செக் செஞ்சுடுங்க!

பரபர வேலைகளை முடித்து வரும் நமக்கு, ஆசுவாசத்தையும், ஒருவித அமைதியையும் தருவது நமது 'வீடு'. அப்படிப்பட்ட வீட்டை நாம் கட்டும்போதோ அல்லது வாங்கும்போதோ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீடு கட்டுவதற்காக நி... மேலும் பார்க்க