பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 69% உயர்வு!
புதுதில்லி: டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம், 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், 69 சதவிகிதம் அதிகரித்து ரூ.698 கோடி ரூபாயாக உள்ளது.
2023-24 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்நிறுவனம் ரூ.412 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டின், 4-வது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.11,474 கோடியாக உயர்ந்துள்ளது. அதன் முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.9,899 கோடியாக இருந்தது.
ஏற்றுமதி உள்ளிட்ட ஒட்டுமொத்த இரு மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை மார்ச் 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் 14 சதவிகிதம் அதிகரித்து 12.16 லட்சமாக இருந்தது. மார்ச் 2024 உடன் முடிவடைந்த காலாண்டில் இது 10.63 லட்சம் யூனிட்டுகளாக இருந்தது.
மார்ச் 2024 உடன் முடிவடைந்த காலாண்டில் 49,000 யூனிட்களாக இருந்த மின்சார வாகன விற்பனை தற்போது 54 சதவிகிதம் அதிகரித்து 76,000 யூனிட்களாக உள்ளது.
2025ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,779 கோடியிலிருந்து ரூ.2,380 கோடியாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் கடந்த நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.44,159 கோடியாக அதிகரித்தது. இது 2023-24 நிதியாண்டில் ரூ.38,885 கோடியாக இருந்தது.
கடந்த நிதியாண்டில் அதன் ஒட்டுமொத்த இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை 13 சதவிகிதம் அதிகரித்து 47.44 லட்சமாக இருந்தது. இது 2023-24 ஆம் ஆண்டில் 41.91 லட்சமாக இருந்தது.
மின்சார வாகன விற்பனை கடந்த நிதியாண்டில் 44 சதவிகிதம் அதிகரித்து 2.79 லட்சம் யூனிட்களாக இருந்தது. 2023-24 நிதியாண்டில் இது 1.94 லட்சம் யூனிட்களாக இருந்தது.
டி.வி.எஸ் மோட்டார் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 2.48 சதவிகிதம் உயர்ந்து ரூ.2,803.55 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: மீண்டும் காளையின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!