புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்து என...
குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அறிமுக வீரராக களமிறங்கும் ஆப்கன் ஆல்ரவுண்டர்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இதையும் படிக்க: டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறார்கள்: விராட் கோலி
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மஹீஷ் தீக்ஷனா மற்றும் யுத்விர் சிங் இருவரும் பிளேயிங் லெவனில் இணைந்துள்ளனர். ஃபஸல்ஹக் ஃபரூக்கி மற்றும் துஷார் தேஷ்பாண்டே பிளேயிங் லெவனில் இல்லை.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான கரிம் ஜனத் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.