சண்டைக்கு தயாராகிவிட்டது இந்தியா; அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்! - பாகிஸ்தான்
இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் பீட்டர்சன்
இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு எனது முதல் தெரிவு கே.எல்.ராகுல்தான் என தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், தற்போது தில்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
இதையும் படிக்க: டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறார்கள்: விராட் கோலி
என்ன சொல்கிறார் கெவின் பீட்டர்சன்?
நடப்பு ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், டி20 போட்டிகளில் கே.எல்.ராகுலை 4-வது வீரராக களமிறக்க வேண்டும் எனவும், விக்கெட் கீப்பருக்கு அவரே தனது முதல் தெரிவு எனவும் தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 போட்டிகளில் இந்திய அணி கே.எல்.ராகுலை 4-வது வீரராக களமிறக்க வேண்டும் எனக் கூறுவேன். இந்திய அணியில் எண்ணற்ற தொடக்க ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால், கே.எல்.ராகுல் விளையாடும் விதத்தினைப் பார்க்கும்போது, அவர் இந்திய அணியில் 4-வது வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் விளையாட வேண்டும் என்பதே எனது முதல் தெரிவாக இருக்கும்.
கடந்த ஆண்டின் மத்தியிலிருந்து கே.எல்.ராகுல் மிகவும் நேர்மறையாக விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக அவர் எப்படி விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம். அவர் மிகவும் அற்புதமாக விளையாடினார் என்றார்.
இதையும் படிக்க: இவர்கள் மூவரும் இங்கிலாந்துக்கு சவாலளிப்பார்கள்; ரவி சாஸ்திரி கூறுவதென்ன?
கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை.
தற்போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கான போட்டியில் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், துருவ் ஜுரெல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.