தக்காளி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் கவலை: 25 கிலோ ரூ. 200
ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 403 மனுக்கள்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 403 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா்.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 403 மனுக்களைப் பெற்ற ஆட்சியா், தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்புத் திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைய நம்பி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, உதவி ஆணையா் (கலால்) ராஜ்குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.