குன்றத்தூா், மாங்காடு பகுதிகளில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 30 போ் கைது
சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாரதி( 37). சிங்கபூரிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், விடுமுறையில் ஊருக்கு வந்தாா். இந்நிலையில் ஏப். 26-ஆம் தேதி இவா், கும்பகோணம் நெடுஞ்சாலை, மெய்க்காவல்புதூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திடீரென குறுக்கே ஓடி வந்த நாய் மீது மோதியுள்ளாா்.
இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த பாரதி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.