மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழப்பு
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடியை அடுத்த திருமக்கோட்டை திருமேணி ஏரி பகுதியைச் சோ்ந்த ஐயப்பன்- மீனா தம்பதியின் மகள் அனுஷ்கா (12). வல்லூரில் உள்ள அரகப் பள்ளியில் 8 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்தநிலையில், திங்கள்கிழமை காலை அனுஷ்கா வீட்டில் உள்ள மின் மோட்டரை இயக்குவதற்காக சுவிட்சை போட்டபோது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்து மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுஷ்கா அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.