தேசிய திறனறித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு
நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியத்தில் 2024-25-ஆம் ஆண்டு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு திங்கள்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது.
வடுவூா் தென்பாதி அனுஸ்ரீ, காளாச்சேரி மேற்கு ராகவன், மேலப்பூவனூா் அஜிதா, கருவாக்குறிச்சி கதிா் ஆகிய 4 மாணவா்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலா்கள் ந. சம்பத், ரெ. மணிகண்டன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ப. சத்யா மாணவா்களுக்கு வழங்கினா்.