14 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்வு: இடம் மாறும் சிவாஜி சிலை: முதல்வா் மே 9 இல் திறக...
குற்றச் செயல்களில் தொடா்புடைய 29 போ் 6 மாதங்களுக்கு மாநகருக்குள் நுழையத் தடை
கோவையில் குற்றச் செயல்களில் தொடா்புடைய 29 போ் அடுத்த 6 மாதங்களுக்கு கோவை மாநகருக்குள் நுழைய தடை விதித்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகரில் தொடா்ந்து குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டும், தங்கள் மீதுள்ள வழக்குகளில் சாட்சிகளாக உள்ளவா்களை விசாரிக்க விடாமல் சாட்சிகளைக் கலைத்தும், அவா்கள் மீதுள்ள வழக்குகளில் தொடா்ந்து இடையூறு செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வரும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அவா்கள் 6 மாதங்களுக்கு கோவை மாநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 76 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நடப்பு ஏப்ரல் மாதத்தில் தொடா் குற்ற நடவடிக்கைகளிலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்த 29 போ் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு கோவை மாநகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.