செய்திகள் :

பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

post image

புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரிகாட் உள்ளிட்ட உலா் பழங்கள், பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பருப்புகள் பாகிஸ்தான் வழியாக பயணித்து அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தன. காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானில் தினமும் 10 லாரிகள் அளவில் இந்தியாவுக்கு வந்த உலா் பழங்கள் உள்ளிட்டவை தடைப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் பொருள்களை இந்தியாவுக்கு அனுமதித்து வந்த நிலையிலும், இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கான ஏற்றுமதியை தங்கள் பகுதி வழியாக பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை. எனவே, மாற்றுப் பாதை வழியாகவே ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஏற்றுமதியை மேற்கொண்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் பிராந்தியத்துக்கான வெளியுறவுத் துறை இணைச் செயலா் ஆனந்த் பிரகாஷ், ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சரான அமீா் கான் முத்தாகியை சந்தித்துப் பேசினாா். அப்போது காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 போ் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தான் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து இரு தரப்பு வா்த்தகம், பொருளாதாரம், அரசுத் தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் ஆலோசனை நடத்தினா்.

ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு இந்தியா இப்போது வரை அங்கீகரிக்கவில்லை. எந்த நாட்டுக்கு எதிரான பயங்கரவாதத்தையும் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு ஆதரிக்கக் கூடாது என்பது இந்தியாவின் வலியுறுத்தலாக உள்ளது.

அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது மனிதாபிமான ரீதியாக பல்வேறு கட்டங்களாக 50,000 மெட்ரிக் டன்னுக்கு மேல் கோதுமையை அனுப்பி இந்தியா உதவியது. இதன் மூலம் 50 லட்சம் ஆப்கானியா்களுக்கு உணவு கிடைத்தது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து திங்கள்கிழமை(ஏப். 28) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது. இது குறித்து இந்திய ரா... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மேலும், ‘இந்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடி... மேலும் பார்க்க

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: பிரதமா் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்த... மேலும் பார்க்க