செய்திகள் :

``அது நடந்தால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்'' - பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்

post image

'இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் வந்துவிடுமா?' - ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, உலகம் முழுக்க இருக்கும் பரபர கேள்வி இது.

'தக்க நடவடிக்கைகள் எடுப்போம்' என்று இந்தியா அடுத்தடுத்த காய்களை நகர்த்தி வருகிறது. நேற்று கூட, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியை சந்தித்து இருந்தார்.

பதிலுக்கு பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைக் காட்டி பயமுறுத்தி வருகிறது.

ராஜ்நாத் சிங்

இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் பேட்டி ஒன்றில், "இப்போதைய சூழலுக்கு தேவைப்படுவதால் நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தி உள்ளோம்.

இந்த சூழலில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதனால், அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவின் மோதல்போக்கு அதிகரித்துவிட்டது. அதனால், இந்தியா பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு உள்ளது என்று அரசாங்கத்திடம் பாகிஸ்தான் ராணுவம் தெரியப்படுத்தி உள்ளது.

எங்களுடைய நாட்டிற்கு நேரடி அச்சுறுத்தல் வந்தால் மட்டுமே அணு ஆயுதங்தள் பயன்படுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.

சமீபத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், 'இந்தத் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை வேண்டும். நாங்கள் அந்த விசாரணையில் கலந்துகொள்ள தயார்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Doctor Vikatan: ஒருநாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்.. பால் குடித்தால் உடல் எடை கூடுமா?

Doctor Vikatan: சராசரி நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்... குறிப்பாக, பெண்கள் எவ்வளவு பால் குடிக்கலாம்... பால் குடித்தால் வெயிட் அதிகரிக்குமா... சைவ உணவுக்காரர்கள்கால்சியம் தேவைக்கு பாலையே ந... மேலும் பார்க்க

`ரத்த ஆறு ஓடும்' - பாக் முன்னாள் பிரதமர் மகன்; `தைரியம் இருந்தால் வாங்க' - மத்திய அமைச்சர் பாட்டீல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா உறுதியாக குற்றம்சாட்டுகிறது. ஆனால், பாகிஸ்தான் இதைக் கடுமையாக மறுத்துவருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு ... மேலும் பார்க்க

DMK : நேரம் பார்த்து பொன்முடியை தூக்கிய MK Stalin | Vijay Vs Udhayanidhi | Imperfect Show 28.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா; மீண்டும் அமைச்சராகும்..! - அமைச்சரவை மாற்றங்கள் என்னென்ன?* "கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தி... மேலும் பார்க்க

Stalin-ஐ கோபப்படுத்திய Ponmudi! Vijay தரும் கோவை ஷாக்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,'பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி' ஆகியோர், தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் துறைகள் ஈரோடு முத்துசாமி, ராஜ கண்ணப்பன், சிவசங்கர், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு ... மேலும் பார்க்க