செய்திகள் :

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

post image

மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. ஆயிரகணக்காd பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சிக் திருக்கல்யாணம், அழகரின் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், மதுரைக்கு வருகை தருவர்.

சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ப்ரியாவிடையுடன் எழுந்தருளினார்.

பூஜைகளுக்கு பின்னர் மங்கள வாத்தியங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

சித்திரைத் திருவிழா இன்று துவங்கியுள்ள நிலையில் அம்மனும் சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலாவும், விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 6-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 8-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 9-ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியதால் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஹார்ட் பீட் - 2 வெப் தொடர்: வெளியீடு எப்போது?

ஹார்ட் பீட் இணையத் தொடர் 2 ஆம் பாகத்தின் வெளியீடு குறித்து தகவல் தெரியவந்துள்ளது.மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் உள்ளி... மேலும் பார்க்க

அடுத்தடுத்து கைதான மலையாளத் திரைப் பிரபலங்கள்! பின்னணியில் யார்?

மலையாள சினிமாவின் பிரபலங்கள் தொடர்ந்து கைதாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா என்றாலே ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமான விஷயம்தான். ஆனால், சினிமாவிலிருக்கும் பெரும்பாலானவர்களின் கொண்டாட்டங... மேலும் பார்க்க

நீ நான் காதல் தொடர் நாயகியின் புதிய தொடர் அறிவிப்பு!

அண்மையில் நிறைவடைந்த நீ நான் காதல் சீரியல் நாயகியின் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நீ நான் காதல் தொடர் சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இத்த... மேலும் பார்க்க

செவ்வாயில் வந்த கிருத்திகை: சிறுவாபுரியில் குவிந்த பக்தர்கள்!

பொன்னேரி அருகே சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.வழக்கமாக செவ்வாய் மற்றும் கிருத்திகை நாள்களில் சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அல... மேலும் பார்க்க

ஜன நாயகன் டீசர் எப்போது?

விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் பேசும் ... மேலும் பார்க்க

டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் அப்டேட்!

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படத்தில் திரை விமர்சகர் கதாபாத்திரத்தில்... மேலும் பார்க்க