டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் அப்டேட்!
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படத்தில் திரை விமர்சகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரேம் ஆனந்த இயக்கிய இப்படத்தில் கௌதம் மேனன், செல்வராகவன், மாறன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் பாடலான கிஸா - 47 வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்ததைத் தொடர்ந்து, இப்படம் மே 16 ஆம் தேதி திரைக்கு வருமென தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (ஏப்.30) காலை 11 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு!