பணிப்பெண்ணிடம் கூடுதல் சாவி; நடிகை நேகா வீட்டில் மாயமான ரூ.34 லட்சம் மதிப்பிலான ...
`ரத்த ஆறு ஓடும்' - பாக் முன்னாள் பிரதமர் மகன்; `தைரியம் இருந்தால் வாங்க' - மத்திய அமைச்சர் பாட்டீல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா உறுதியாக குற்றம்சாட்டுகிறது. ஆனால், பாகிஸ்தான் இதைக் கடுமையாக மறுத்துவருகிறது.
இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையாக இந்தியா சிந்து நதி நீரை தடுத்து நிறுத்துவதாக அறிவித்தது. இதனால், இருநாடுகளுக்கு மத்தியில் வார்த்தைப் போர் அதிகரித்திருக்கிறது.

பாகிஸ்தான் அமைச்சர்களின் ஆக்ரோஷமான பேச்சும், அதற்கு இந்திய அமைச்சர்களின் ஆக்ரோஷமான பதிலும் என விவகாரம் தீவிரமாகிவருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை சிந்து மாகாணத்தின் சுக்கூரில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (Pakistan People's Party - PPP) தலைவரும், முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ சர்தாரி பேசினார்.
அப்போது, `` சிந்து நதி பாகிஸ்தானுக்குச் சொந்தமானது. அது எப்போதும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும். சிந்து நதியில் தண்ணீர் நிறுத்தப்பட்டால் இந்தியாவில் இரத்த ஆறு ஓடும். ஏனென்றால், பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்புமில்லை.
இந்தியா தனது சொந்த பலவீனங்களை மறைத்து, இந்தியா மக்களை ஏமாற்ற பாகிஸ்தானை குற்றம் சாட்டுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார். எனவே, சிந்து நதி நம்முடையது, நம்முடையதாகவே இருக்கும். நமது நீர் அதன் வழியாகப் பாயும். அல்லது அவர்களின் இரத்தம் ஓடும்" என தி நியூஸ் இன்டர்நேஷனல்பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது.
இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் சூரத்தில் நடந்த ஒரு விழால் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல், ``சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் சுல்பிகார் அலி பூட்டோ,
ஒருவேளை சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டால், இந்தியாவில் இரத்த ஆறு ஓடும்' என்று மிரட்டுகிறார். நாம் இதற்கெல்லாம் பயப்படுவோமா? நான் பூட்டோவிடம் சொல்கிறேன்... உங்களுக்கு கொஞ்சம் தைரியம் இருந்தால், இங்கே வாருங்கள். வந்துபாருங்கள்" எனப் பேசியிருக்கிறார்.