கனடா பிரதமராகும் மார்க் கார்னே! அமெரிக்காவுடனான உறவுக்கு முடிவு என அறிவிப்பு!
துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகின்றது.
இன்றைய கூட்டம் தொடங்கியவுடன் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத் திருத்தம் 2025-ஐ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டத் திருத்த முன்வடிவை தாக்கல் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.