உட்கார்ந்தே வேலை செய்பவரா நீங்கள்? கல்லீரல் கொழுப்பு நோய் வரலாம்! - ஏன்? எப்படி?
விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.சி. புத்தகத்தை கால தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும். பழைய சட்டத்தின்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.சி. புத்தகத்தை கொடுத்தவரிடம் திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம் நகராட்சித் திடல் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் மாவட்ட கார் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சி.பி.சி. குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.ஆர். முகமது ஹக்கீம், பொருளாளர் ஜெ.பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கார் வியாபாரிகள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக நகரச் செயலர் ஜெயராமன் வரவேற்றார். நிறைவில் நகரத் தலைவர் பெருமாள் நன்றி கூறினார்.