கேரளா: 5 வயது சிறுமியைக் கடித்த தெரு நாய்; தடுப்பூசி போடப்பட்டும் மரணமடைந்த சோகம...
பங்குச் சந்தை ஓரளவு உயர்வுடன் முடிவு!
மும்பை: புவிசார் அரசியல் பதட்டங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் ஓரளவு உயர்ந்தன.
இருப்பினும், ப்ளூ சிப் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவற்றின் பங்குகள் வெகுவாக உயர்ந்து முடிந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், பிஎஸ்இ பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 442.94 புள்ளிகள் உயர்ந்து 80,661.31 புள்ளிகளாக இருந்தது.
வர்த்தக நேர முடிவில் சென்செகஸ் 70.01 புள்ளிகள் உயர்ந்து 80,288.38 ஆகவும் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 7.45 புள்ளிகள் உயர்ந்து 24,335.95 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, எடர்னல், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில் இதற்கு நேர்மாறாக அல்ட்ராடெக் சிமெண்ட், சன் பார்மா, பவர் கிரிட், என்டிபிசி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை சரிந்து முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.2,474.10 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்தும் ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் ஆகியவை சரிந்து முடிந்தது.
ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் உயர்ந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) பெரும்பாலும் உயர்வுடன் முடிவடைந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.59% குறைந்து 64.81 டாலராக உள்ளது.
இதையும் படிக்க: டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர லாபம் 69% உயர்வு!