செய்திகள் :

விண்வெளி செல்லும் இந்திய வீரர்! யார் இந்த சுபான்ஷு சுக்லா?

post image

இந்திய விண்வெளி வீரர் கேப்டன் சுபான்ஷு சுக்லா மே 29ஆம் தேதி விண்வெளிக்கு செல்லவிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்வையிட்ட முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றையும் படைக்க உள்ளார்.

வருகிற மே 29 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.33 மணிக்கு ஆக்ஸியம் மிஷன் 4-ன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் அவர்கள் விண்வெளிக்குச் செல்விருக்கின்றனர். இவருக்கு முன்னதாக 1984 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் சோயுஸ் விண்கலத்தில் இந்திய வீரர் ராகேஷ் சர்மாவின் சென்றிருந்தார்.

2,000 மணி நேரத்திற்கும் மேல் பறக்கும் திறன் பெற்றவரான சுபான்ஷு சுக்லா, 2019 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரஷியாவிலும் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாள்கள் தங்கியிருக்க போகும் சுபான்ஷு சுக்லா, சைனோபாக்டீரியாக்கள் உள்ளிட்ட முக்கிய ஆய்வுகள் மேற்கொள்ளவிருக்கிறார்.

இதையும் படிக்க: அரிசி கிலோ ரூ.340, கோழிக்கறி ரூ.800; அதள பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

யார் இந்த சுபான்ஷு சுக்லா?

ஐ.ஏ.எஃப் கேப்டனான சுபான்ஷு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் பிறந்து புணேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியில் கல்வி கற்றவர். பின்னர் 2006 ஆம் ஆண்டில் விமானப் படையில் சேர்ந்து, 2024 ஆம் ஆண்டு மார்ச்சில் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.

2,000 மணி நேரத்திற்கும் மேலான விமானத்தை இயக்கிய அனுபவத்தைக் கொண்டுள்ளவர் சுபான்ஷு சுக்லா. ஐஏஎஃப்பில் சோதனை விமானியாக இருக்கும் இவர், ஷூ-30 எம்.கே.ஐ, மிக்-21, மிக்-29, ஜாகுவார், ஹாக், டோர்னியர், ஆன்-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களையும் இயக்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டில் இஸ்ரோவால் விண்வெளி வீரர் பயிற்சிக்காக சுபான்ஷு சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுபான்ஷு சுக்லாவுடன் செல்லும் குழுவினர் யார்?

இவருடன் நாசாவின் மூத்த விண்வெளி வீரர் பெக்கி விட்சன் தலைமையிலான சர்வதேச குழுவுடன், போலந்து, ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பெக்கி விட்சன்

முன்னாள் நாசா விண்வெளி வீரரும், ஆக்ஸியம் ஸ்பேஸில் விண்வெளிப் பயணத்தின் தற்போதைய இயக்குநருமான இவர், மிஷன் கமாண்டராகப் பணியாற்றவுள்ளார்.

ஸ்லோவோஸ்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் பணிபுரியும் போலந்து விண்வெளி வீரரான இவர் ஒரு பணி நிபுணராக பணியாற்றவுள்ளார்.  

திபோர் கபு

ஹங்கேரிய விண்வெளி வீரரும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்திற்கான திட்ட விண்வெளி வீரருமான அவர், மற்றொரு பணி நிபுணராக பணியாற்றவிருக்கிறார்.  

ஈரான் அலட்சியத்தால் துறைமுக வெடிவிபத்து

ஈரானின் தென்மேற்கே அமைந்துள்ள நாட்டின் மிகப் பெரிய ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்துக்கு ஒரு சிலரின் அலட்சியப் போக்குதான் காரணம் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பாத... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு விமானத்தில் ஆயுதங்கள் அனுப்பவில்லை- துருக்கி மறுப்பு

இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பிவைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது. காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள்... மேலும் பார்க்க

சீன உணவகத்தில் தீ: 22 போ் உயிரிழப்பு

சீனாவின் லியாவோனிங் மாகாணம், லியோவ்யாங் நகரிலுள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 22 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா். அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் இந்தத்... மேலும் பார்க்க

நியூசிலாந்து கடலுக்கு அடியில் நிலநடுக்கம்...! சுனாமி எச்சரிக்கை?

நியூசிலாந்து நாட்டின் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூசிலந்தின் இன்வெர்காரில் நகரத்திலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில்;... மேலும் பார்க்க

கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் சடலமாக மீட்பு! உடலைத் தாயகம் கொண்டு வர வலியுறுத்தல்!

கனடா நாட்டில் பலியான இந்திய மாணவியின் உடலைத் தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி நிர்வாகி தவிந்தர் சையினி... மேலும் பார்க்க

சீன உணவகத்தில் தீ: 22 பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். லியோனிங் மாகாணத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தில் இன்று (ஏப்.29) மதியம் 12.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிரு... மேலும் பார்க்க