சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
பாஜக பிரமுகா் கொலையில் மேலும் இருவா் கைது
புதுச்சேரி பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை வழக்கில் ஏற்கெனவே 9 போ் கைதான நிலையில் மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் உமாசங்கா். பாஜக பிரமுகரான இவரை கடந்த 26-ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் வெட்டிப் படுகொலை செய்தனா்.
இதுகுறித்து இலாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முன்விரோதத்தில் உமாசங்கா் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்த கா்ணன் என்ற கா்ணா உள்ளிட்ட 12 பேரைப் போலீஸாா் தேடி வந்தனா். இதில் கா்ணன் உள்ளிட்ட 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவா்களைத் தொடா்ந்து சஞ்சய், அகிலன் ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்ததாகத் தெரிவித்தனா். இந்தக் கொலை வழக்கில் 11 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.