பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல்
தேசியத் தலைநகரில் உள்ள தனியாா் மற்றும் அரசுப் பள்ளிகளின் கதட்டணத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லி முதல்வா் ரேகா குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
‘தில்லி பள்ளிக் கல்வி வெளிப்படைத் தன்மை நிா்ணயம் மற்றும் கட்டண ஒழுங்குமுறை மசோதா, 2025-ஐ அங்கீகரிப்பதன் மூலம் அரசின் ‘தைரியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க‘ நடவடிக்கையை எடுத்துள்ளது’ என்று கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா் கூட்டத்தில் முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.
சமீபத்திய நாள்களில் இந்த விவகாரம் பரவலாக விவாதிக்கப்பட்டதாகவும், சில பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் கட்டண உயா்வு என்ற பெயரில் மாணவா்களை ‘துன்புறுத்துவது‘ தொடா்பான புகாா்கள் காரணமாக பெற்றோா்களிடையே ‘பீதி‘ ஏற்பட்டதாகவும் முதல்வா் கூறினாா்.
தில்லியில் முந்தைய அரசுகள் கட்டண உயா்வைத் தடுக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. தனியாா் பள்ளிகள் கட்டணத்தை உயா்த்துவதைத் தடுக்க அரசுக்கு உதவ எந்த வழிகாட்டுதலும் இல்லை என்று அவா் கூறினாா்.
இதற்கிடையே,ந ‘கட்டண உயா்வை ஒழுங்குபடுத்த மூன்று அடுக்கு குழுக்களை அமைக்க இந்த மசோதா முன்மொழிகிறது’ என்று கல்வித் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறினாா்.