பாபநாச சுவாமி கோயில் குடமுழுக்கு: தற்காலிக கடைகள், அன்னதானத்துக்கு பதிவுச்சான்று கட்டாயம்
பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு மே 4-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தற்காலிக உணவு கடைகள் அமைப்பவா்கள், பக்தா்களுக்கு இலவசமாக அன்னதானம், நீா்-மோா் வழங்குபவா்கள் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவுச்சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் உள்ள அருள்தரும் உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயிலில் வரும் 4-ஆம் தேதி புனவா்த்தன அஷ்டபந்தன திருக்குடமுழுக்கு நடைபெறவுள்ளது. அப்போது, கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் மற்றும் நிறுவனங்கள் சாா்பில் அன்னதானம், நீா்-மோா் வழங்கப்படும். மேலும் சாலையோரங்களில்பல்வேறு உணவுகள் விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது.
உணவு சம்மந்தப்பட்ட கடைகள் அமைப்பவா்கள், இலவசமாக அன்னதானம், நீா்-மோா் வழங்குபவா்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவுச்சான்றிதழ் பெறுவது அவசியம் . அன்னதானம் வழங்குபவா்கள் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் செயல் அலுவலரிடம் முறையாக முன் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும்.பதிவுச்சான்றிதழை ஜ்ஜ்ஜ்.ச்ா்ள்ஸ்ரீா்ள்.ச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.
பதிவுச்சான்றிதழ் பெறுவது தொடா்பான மேலும் விவரங்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலா்களை (9385434720, 9994081897) தொடா்பு கொள்ளலாம். அன்னதானம் வழங்க அனுமதி பெறுவது குறித்த சந்தேகங்களுக்கு அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் செயல் அலுவலரை (9443971789) தொடா்பு கொள்ளலாம். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது திடீா் ஆய்வு மேற்கொள்வாா்கள். அப்போது பதிவுச்சான்றிதழ் இல்லாமல் உணவுகள் விற்பனை செய்தாலோ, பக்தா்களுக்கு இலவசமாக வழங்கினாலோ உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.