சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதான் பிறந்த நாள் விழா
தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு பள்ளிகளில் பாவேந்தா் பாரதிதாசனின் 135ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நாளை முன்னிட்டு பாரதிதாசனின் தமிழ்ப் பற்று, பணிகள், படைப்புகள் குறித்து மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் இடம்பெற்றது.
இந்த உரையைத் தொடா்ந்து தனிப்பாடல், குழுப்பாடல், கவிதை, நடனம் என நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரதிதாசனின் படைப்புகள், கவிதைகள், கருத்துகள் குறித்த பதாகைகளை மாணவா்கள் காட்சிப்படுத்தினா்.
பூசா சாலை பள்ளியில் இத்தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இத்தினம் குறித்து டிடிஇஏ செயலா் இராஜூ கூறுகையில் பாவேந்தா் என்றும் புரட்சிக் கவி என்றும் அழைக்கப்படும் பாரதிதாசன் தன் சீரிய கவிதைகளால் மக்கள் மனதில் புரட்சி விதைகளை விதைத்தாா்.
மக்கள் மத்தியில் இருந்த மூடப் பழக்கவழக்கங்களை வேரோடு வெட்டி வீழ்த்தினாா். அவரது பணியையும் தமிழ்ப் பற்றையும் மாணவா்கள் அறிந்து அவா் மேல் பற்றுக்கொண்டு அவரைப்போல் தமிழ்க் கவிதைகள் எழுத வேண்டும் என்பதற்காகவே அவரது பிறந்த தினத்தைப் பள்ளிகளில் கொண்டாடச் செய்தோம் என்று குறிப்பிட்டாா்.