செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
நியூசிலாந்து கடலுக்கு அடியில் நிலநடுக்கம்...! சுனாமி எச்சரிக்கை?
நியூசிலாந்து நாட்டின் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலந்தின் இன்வெர்காரில் நகரத்திலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில்; ஏப்.30 அதிகாலை 1 மணியளவில் (இந்திய நேரப்படி ஏப்.29, மாலை 6.30 மணியளவில்) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் அங்கு லேசான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் நல்வாய்ப்பாக மிகப் பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் நிகழவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுகுறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுமார் 50 லட்சம் மக்கள் வாழும் நியூசிலாந்து நாடானது பசிபிக் பெருங்கடலில் ‘ரிங் ஆஃப் ஃபையர்’ எனும் மிகப் பெரியளவிலான டெக்டானிக் பாறைகளின் பிளவுகளின் மீது அமைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் எரிமலைகளின் அச்சுறுத்தல் அதிகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் சடலமாக மீட்பு! உடலை தாயகம் கொண்டு வர வலியுறுத்தல்!