செய்திகள் :

கேரளா: 5 வயது சிறுமியைக் கடித்த தெரு நாய்; தடுப்பூசி போடப்பட்டும் மரணமடைந்த சோகம்; என்ன நடந்தது?

post image

கேரள மாநிலம் மலப்புரம் பெருவள்ளூரைச் சேர்ந்தவர் சல்மான் பாரிஸ். இவரது மகள் ஸியா பாரிஸ். 5 வயது ஆன ஸியா பாரிஸ் கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க நடந்து சென்றுள்ளார்.

அப்போது ஸியா பாரிஸைத் தெருநாய் ஒன்று ஆக்ரோஷமாகக் கடித்தது. அப்போது அவரைக் காப்பாற்ற வந்த சுமார் 6 பேரையும் அதே தெருநாய் கடித்தது.

நாய் கடித்ததில் சிறுமி ஸியா பாரிஸுக்குத் தலை, முகம், உதடு, கை, கால் என உடல் முழுவதும் 20 இடங்களில் காயம் ஏற்பட்டது.

நாய் கடித்த அன்றே ஸியா பாரிஸ் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்றதில் நாய்க்கடிக்கு ஆளானவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சென்று தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.

ஸியா பாரிஸுக்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மொத்தம் மூன்று தடுப்பூசிகள் போடப்பட்டன. நாய் கடித்த காயங்கள் ஆறிவந்த நிலையில் சகஜமாக விளையாடி வந்தார் ஸியா பாரிஸ்.

தெரு நாய்
தெரு நாய்

இதற்கிடையே கடந்த 16-ம் தேதி ஸியாவுக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஸியா பாரிஸை அழைத்துச் சென்றனர் பெற்றோர்.

சிறுமியின் உடலில் சில அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அவரது ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் சிறுமிக்கு ரேபிஸ் வைரஸ் பாதித்திருப்பது கண்டறியப்பட்டது.

சுமார் 6 நாட்களாக அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் ஸியா பாரிஸுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. சிகிச்சை பலனின்றி ஸியா இன்று அதிகாலை 2 மணி அளவில் மரணமடைந்தார்.

நாய் கடித்ததால் இறந்த ஸியா பாரிஸ்
நாய் கடித்ததால் இறந்த ஸியா பாரிஸ்

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "சிறுமியின் தலையில் மட்டுமே நான்கு இடங்களில் நாய் கடித்ததில் ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது.

தலைமட்டும் அல்லாது முகம், உதடு உள்ளிட்ட இடங்களில் நாய் கடித்ததால் எளிதில் மூளைக்கு ரேபிஸ் வைரஸ் தொற்றியிருக்கிறது. சிறுமியைக் காப்பாற்ற அனைத்து வழிகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நாய்க்கடி விஷத்தைத் தடுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டும் பலன் அளிக்கவில்லை. மரணமடைந்த சிறுமியின் ஸியா பாரிஸின் உறவினர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்றனர்.

நாய்க்கடிக்கான தடுப்பூசிகள் அனைத்தும் போடப்பட்ட பின்னரும் சிறுமி மரணமடைந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மகன்களை, தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய தந்தை.. திருப்பூரில் சோகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் குளிப்பதற்காக, கோவையில் இருந்து சேகர் தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.அப்போது, வாய்க்காலில் தனது இரண்டு மகன்களான சசிதரன் ... மேலும் பார்க்க

கோத்தகிரி: குறைமாத குட்டி ஈன்று இறந்து கிடந்த தாய் யானை.. என்ன காரணம்? - குழப்பத்தில் வனத்துறை

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகில் உள்ள நட்டக்கல் பகுதியயைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சிலர் வழக்கமாக தேயிலை பறிக்கும் பணிக்கு நேற்று காலை சென்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட வனப்பகுதியில்... மேலும் பார்க்க

மும்பை: அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் திடீர் தீவிபத்து; முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்..!

மும்பை தென்பகுதியில் இருக்கும் பெல்லார்ட் எஸ்டேட்டில் அமலாக்கப்பிரிவின் அலுவலகம் இருக்கிறது. இந்த அலுலகத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. அமலாக்கப் பிரிவு அலுவலக கட்டிடத்தின... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண் தொழிலாளர்கள் பலி; 7 பேர் காயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர். சிவகாசி சிறுகுளம் காலணியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 57) மற்றும் பூத்தாயம்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் தீ விபத்து; கர்ப்பிணிகள் மீட்பு; கொதிக்கும் மக்கள்

தஞ்சாவூரின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை.பழமையான இந்த மருத்துவமனையில் மகப்பேறு, அவசரக் கால அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், கண் சிகிச்சை, ச... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் அமர்ந்த தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகள்; பெரியப்பாவுடன் ரயில் மோதி இறந்த பரிதாபம்!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகில் உள்ள ஜெகத்புரா பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் சுமித், குடும்ப பிரச்னையில் தனது மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு தற்கொலை செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார். அவர்... மேலும் பார்க்க