செய்திகள் :

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண் தொழிலாளர்கள் பலி; 7 பேர் காயம்

post image

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர்.

சிவகாசி சிறுகுளம் காலணியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 57) மற்றும் பூத்தாயம்மாள் நகரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் மனைவி ராஜரத்தினம் (56) ஆகியோர் எம்.புதுப்பட்டி அருகே நெடுங்குளத்தில் ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்

மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 80-க்கும் மேற்பட்ட அறைகளில், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அறை எண்:14-ல் பட்டாசுக்கு ரசாயன கலவை செலுத்தும் பணியின்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவி பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியது. இதனால் ஆலையில் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

இதைத்தொடர்ந்து, வெடிவிபத்து குறித்து சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் பட்டாசு ஆலையில் பரவிய தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

உயிரிழந்தவர்

இந்த வெடிவிபத்தில் சிக்கி எம்.சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த விஜயகுமார் மனைவி கலைச்செல்வி(33), சொக்கம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி மாரியம்மாள்(51), கூமாபட்டியை சேர்ந்த ராமர் மனைவி திருவாய்மொழி(45) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் கட்டிட இடிபாடுகள் மற்றும் தீ விபத்தில் சிக்கி கூமாபட்டியை சேர்ந்த கோமதி(55), ராபியா பீவி(50), பாத்திமாமுத்து(65), கோபாலன்பட்டி முனியம்மாள்(50), எம்.புதுப்பட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி(55) உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

வெடிவிபத்து

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து எம்.புதுப்பட்டி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்" என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

தஞ்சாவூர்: அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் தீ விபத்து; கர்ப்பிணிகள் மீட்பு; கொதிக்கும் மக்கள்

தஞ்சாவூரின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை.பழமையான இந்த மருத்துவமனையில் மகப்பேறு, அவசரக் கால அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், கண் சிகிச்சை, ச... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் அமர்ந்த தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகள்; பெரியப்பாவுடன் ரயில் மோதி இறந்த பரிதாபம்!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகில் உள்ள ஜெகத்புரா பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் சுமித், குடும்ப பிரச்னையில் தனது மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு தற்கொலை செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார். அவர்... மேலும் பார்க்க

கரூரில் தொடர்ந்து சதமடித்த வெயில்... வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?

கரூரிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் மிகவும் பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில... மேலும் பார்க்க

கடலூர், கள்ளக்குறிச்சி: ஏரி, ஓடையில் குளிக்கச் சென்ற 5 சிறுவர், சிறுமியர் நீரில் மூழ்கி பலியான சோகம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகில் இருக்கிறது வடக்கு கொளக்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த உபையதுல்லா (9), முகமது ஹபில் (10), ஷேக் அப்துல் ரகுமான் (13) போன்றவர்கள் நண்பர்கள். இவர்கள் ம... மேலும் பார்க்க

உயிர் பலியில் முடிந்த ரோலர் கோஸ்டர் சவாரி; வருங்கால கணவர் கண்முன் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

டெல்லியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் புதன்கிழமை 24 வயது பெண் ஒருவர் ரோலர் கோஸ்டரிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சாணக்யபுரியைச் சேர்ந்த விற்பனை மேலாளரார் பிரி... மேலும் பார்க்க

பைக்கிற்குள் பதுங்கியிருந்த கட்டுவிரியன்; பின் சீட்டிலிருந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்; நடந்தது என்ன?

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் ஹரிகிருஸ்ணன் (21) ப்ளஸ் 1 படித்துவிட்டு எல்க்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் இவ... மேலும் பார்க்க