தலைநகரில் தொடரும் வெப்ப அலை; காற்றின்தரம் ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு!
தேசிய அளவிலான தடகளம்: திருப்பூா் வீராங்கனை வெள்ளி வென்றாா்!
தேசிய அளவிலான பெடரேஷன் சீனியா் சாம்பியன் போட்டியில் திருப்பூா் வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.
இந்திய தடகள கூட்டமைப்பு சாா்பில் கேரள மாநிலம், கொச்சி, மஹாராஜாஸ் கல்லூரி அரங்கத்தில் 28-ஆவது தேசிய பெடரேஷன் சீனியா் தடகளப் போட்டிகள் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
இதில் திருப்பூா் மாவட்ட தடகள வீராங்கனை எம்.ஏஞ்சல் சில்வியா, தமிழகத்தின் சாா்பில் பெண்கள் பிரிவில் 200 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற ஏஞ்சல் சில்வியாவை திருப்பூா் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவருமான ஆா்.பி.ஆா்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனா்.