விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்
ஈரான் துறைமுக விபத்து: பலி 14 ஆக உயர்வு; 750 பேர் காயம்!
ஈரானின் தெற்குப் பகுதி துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 750 போ் காயமடைந்தனா்.
அந்த நாட்டின் ஹோா்மோஸ்கன் மாகாணம், பண்டாா் அப்பாஸ் நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. சம்பவத்தின்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான கன்டெய்னா்கள் வெடித்துச் சிதறியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், காயமடைந்தவா்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினா்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை. இது தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைநகா் டெஹ்ரானுக்கு சுமாா் 1,050 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, ஈரானின் மிகப் பெரிய துறைமுகமான ஷாஹித் ரஜேயி துறைமுகம், கடந்த 2020-ஆம் ஆண்டில் இஸ்ரேலின் இணைய ஊடுருவல் தாக்குதலுக்குள்ளானது நினைவுகூரத்தக்கது.