நாட்டிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் திட்டங்கள்: துணை முதல்வர் உதயநிதி
மெய்யழகன் ஒரு காவியம்: நானி
நடிகர் நானி மெய்யழகன் திரைப்படத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நடிகர் நானி நடித்த ஹிட் 3 திரைப்படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் டிரைலர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதால் இப்படம் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இதற்கான புரமோஷன்களில் நானி பங்கேற்று வருகிறார். அப்படி, நேர்காணல் ஒன்றில் பேசியவர், “கடந்த 10 ஆண்டுகளில் நான் பார்த்த திரைப்படங்களில் சிறந்த படமென்றால் மெய்யழகன்தான்.பல இடங்களில் நெகிழ்ந்துவிட்டேன். அப்படம் ஒரு மேஜிக்போல் நிகழ்ந்துவிட்டது. ரூ. 1000 கோடி பட்ஜெட் இருந்தாலும் இப்படிப்பட்ட படத்தை எடுக்க முடியாது.
தனிப்பட்ட முறையில் மிக நெருக்கமான படம். இப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் கார்த்தியிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். பிரேம் குமார் காலத்தால் அழியாத கிளாசிக்கை உருவாக்கிவிட்டார்” எனத் தெரிவித்தார்.