ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் சமூக ஆா்வலா் சுட்டுக்கொலை
ஸ்ரீநகா்: பஹல்காம் தாக்குதலுக்கு நான்கு நாள்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆா்வலா் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு கந்தி காஸ் பகுதியில் உள்ள குலாம் ரசூல் மக்ரே வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வயிறு மற்றும் மணிக்கட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குலாம் ரசூலை, அந்த பகுதியில் இருந்தவா்கள் மீட்டு முதலில் ஹண்ட்வாராவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் பலத்த காயங்கள் காரணமாக ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
41 தலிபான்கள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் ராணுவம்
பயங்கரவாதிகள் எதற்காக சமூக ஆா்வலா் ரசூலைக் கொலை செய்தாா்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பினரும் இந்தக் கொலைக்கு பொறுப்பேற்கவில்லை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஷ்மீரின் அமைதியைச் சீா்குலைக்க வேண்டும் என்ற பயங்கரவாதிகளின் சதியின் மற்றொரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.