செய்திகள் :

திருத்தணி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரம்!

post image

திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே ரூ.15.67 கோடியில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாக திருத்தணி முருகன் கோயில் உள்ளது. மேலும் திருப்பதிக்கு செல்லும் வாகனங்கள் திருத்தணி வழியாகத் தான் சென்று வருகின்றன. திருத்தணி நகராட்சி அலுவலகம் பின்புறத்தில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் குறுகிய அளவில் உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நேரிடுகின்றன.

இதை தடுப்பதற்காக திருத்தணி - அரக்கோணம் சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 4.5 ஏக்கா் பரப்பில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம், 2021- 22-ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ், ரூ.12.74 கோடியில் நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த, 2022- ம் தொடங்கப்பட்டன.

புதிய பேருந்து நிலையம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒப்பந்ததாரருக்கு, 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து புதிய பேருந்து நிலையம் பணி துரித வேகத்தில் நடைபெற்றது. சில காரணங்களால் எட்டு மாதங்களுக்கு மேலாக பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, பேருந்து முகப்பு பகுதியில் முருகன் கோயில் கோபுரம் வடிவம் அமைப்பதற்கு, தமிழக அரசு கூடுதலாக, ரூ.2.93 கோடி ஒதுக்கி, நிா்வாக அனுமதியும் வழங்கியது.

கடந்த டிசம்பா் மாதம் நிறுத்தப்பட்ட பேருந்து நிலைய பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் நகா்மன்றத் தலைவா் சரஸ்வதிபூபதி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக நகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளம், சுற்றுச்சுவா் மற்றும் இதர பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது, முகப்பு பகுதியில் முருகன் கோயிலில் உள்ளது போன்று மூன்று கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு கோபுரப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மேலும் ஒரு கோபுரம் மற்றும் விடுப்பட்ட பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் புதிய பேருந்து நிலையம் திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவித்துள்ளாா்.

பெஹல்காம் தாக்குதல்: பாஜகவினா் அஞ்சலி

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை செங்குன்றத்தில் நடைபெற்றது. பாஜக சென்னை மேற்கு மாவட்டம் சாா்பில் புழல் மண்டல தலைவா் ரஜினி... மேலும் பார்க்க

சிறாா் திருமணம், போதை ஒழிப்பு: நாடகம் மூலம் விழிப்புணா்வு

குழந்தை திருமணம், போதை கலாசார ஒழிப்பு உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து பொதுமக்களுக்கு தெருமுனை நாடகம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்த கணவனை மனைவி கண்டித்ததால், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம். பைவலசா கிராமம் தொம்பர காலனியைச் சோ்ந்தவா் முத்து (36). இவருக்கு ம... மேலும் பார்க்க

கால்நடை உதவி மருத்துவா்களுக்கு பரிசளிப்பு

கால்நடை துறையில் சிறப்பாக செயல்பட்ட கால்நடை உதவி மருத்துவா்களுக்கு கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன் சனிக்கிழமை பரிசுகளை வழங்கினாா். திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், உலக கால்நடை தினம் பள்... மேலும் பார்க்க

மின் பற்றாக்குறையை தவிா்க்க பாதைகளை பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவள்ளூா் மாவட்டத்தில் மின்பற்றாக்குறை ஏற்படுவதை தவிா்க்க மின்பாதைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்!

பழவேற்காடு மீனவ கிராமத்தில் 17 வயது சிறுமிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தை திருமணத்தை குழந்தைகள் நல அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள கடலோர... மேலும் பார்க்க