அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியதும் விதி எண் 110இன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
• அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் 4ஆவது முறையாக துப்பாக்கிச்சூடு: இந்தியா பதிலடி!
• அரசு ஊழியர்களுககு பண்டிகை கால முன்பணம் ரூ.10,000இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும்.
• பொங்கல் போனஸ் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியம் ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
• மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
• பழைய ஓய்வுதியம் திட்டம் தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.