விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் கைது
விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அசாமில் காங்கிரஸ் எம்.பி. வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் மாநிலத் தலைவர் கு. சரவணன் தலைமை வகித்தார். சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டடோர் கைது செய்யப்பட்டனர்.