செய்திகள் :

தமிழகத்தில் மதவாதம் எங்கு இருக்கிறது? மு.க. ஸ்டாலின் - வானதி சீனிவாசன் காரசார வாதம்!

post image

தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி எங்கு இருக்கிறது? எப்படி, எந்த சூழலில் இருக்கிறது என்று சொல்லுங்கள்? என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று, கோவையில் காரில் குண்டுவெடித்த சம்பவத்தைக் குறிப்பிட்டு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசினார். மேலும், ஆடிட்டர் ரமேஷ் கொலை பற்றி சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் மதவாத சக்திகள் எந்த ரூபத்திலும் உள்ளே நுழைய முடியாது என்றும், கோவையில் நடந்த சம்பவம் உண்மைதான், ஆனால் உடனடியாக அமைதி நிலைநிறுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.

பேரவையில் பேசிய வானதி சீனிவாசன், ஆடிட்டர் ரமேஷ் கொலை பற்றி சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார். ஆடிட்டர் ரமேஷ் கொலை அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்தது என்று முதல்வர் பதிலளித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி எங்கு இருக்கிறது? எப்படி எந்த சூழலில் இருக்கிறது என்று சொல்லுங்கள். உங்களுடைய பாஜக ஆளும் மாநிலங்களில் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். எந்தக் காரணத்தையும் கொண்டு தமிழகத்துக்குள் மதவாதம் நுழைய முடியாது. காஷ்மீர் போன்று தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது. காஷ்மீர் பிரச்னையில் கூட மத்திய அரசின் பாதுகாப்புக் குறைபாடு குறித்து நாங்கள் பேசவில்லை. மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றுதான் பேசியிருந்தோம் என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், மத்தியில் ஆளும் பாஜக அரசிடம் பேசி தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொடுக்குமாறும் வானதி சீனிவாசனை வலியுறுத்தினார்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று(திங்கள்கிழமை) இரவு 7 மணி வரை கடலூர், பெரம்பலூர், அரியலூர், ம... மேலும் பார்க்க

பழனிசாமி ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா? ஆர்.எஸ்.பாரதி

சென்னை: குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த பழனிசாமியின் அரசியல் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. பழனிசாமி ஆட்சியில் அமைச்சரவை மாற்றமே நடக்கவில்லையா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அ... மேலும் பார்க்க

மே 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மே 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட செய்தியில், குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறத... மேலும் பார்க்க

மகப்பேறு விடுப்பு: முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: அரசுப் பணியில் உள்ள மகளிருக்கான மகப்பேறு விடுப்பு குறித்த மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்க... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.மேலும், அடுத்த 6 மாதங்களின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தமி... மேலும் பார்க்க

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்க தேசத்தினர் 30க்கும் மேற்பட்டோர் கைது

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்சைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்க தேச நாட்டைச் சேர்ந்தவர்க... மேலும் பார்க்க