டி20 கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறார்கள்: விரா...
அமைச்சரவை மாற்றம்: மீண்டும் அமைச்சராக பதவியேற்கும் மனோ தங்கராஜ்..
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு பரபரப்பாக தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் சர்ச்சையான பேச்சுகளாலும், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளாலும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

எதிர்பார்த்தது போலவே, அமைச்சர் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இருவரின் ராஜினாமா கடிதங்களும் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜி வகித்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு மீண்டும் பால்வளத்துறை வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் தொடங்கியது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
