செய்திகள் :

`குளிரூட்டப்பட்ட அறையில் குங்குமப்பூ விவசாயம்' - சாதித்த கேரள இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி!

post image

குங்குமப்பூ நம் நாட்டில் காஷ்மீர் மட்டுமே நல்லபடியாக விளைச்சலை கொடுத்து வருகிறது. காஷ்மீரில் நிலவும் சீதோஷ்ண நிலைதான் குங்குமப்பூ விளைச்சலுக்கு கைகொடுக்கிறது.

நாட்டின் பிற பகுதிகளில் குங்குமப்பூ விவசாயம் சாத்தியம் இல்லை என்ற நிலைதான் இருந்துவந்தது. அந்த சவாலை முறியடித்து மொட்டை மாடியில் குங்குமப்பூ விவசாயம் செய்து அசத்தி வருகிறார் கேரளாவைச் இளம் சிவில் இன்ஜினியர் சேஷாத்துரி.

கிற்றிகோ-வில் சிவில் இன்ஜினியராக வேலை பார்த்த சேஷாத்திரி 33-வயது ஆகும் நிலையில், தனது வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக குங்குமப்பூ சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.

குங்குமப்பூ

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் பகுதியைச் சேர்ந்தவர்தான் சேஷாத்திரி  இவரது வீட்டின் மொட்டை மாடியில் குளிரூட்டப்பட்ட அறையில் குங்குமப்பூ விவசாயம் செய்து லாபம் ஈட்டி வருகிறார்.

குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள் பல அடுக்குகளாக தட்டுகளை வைத்து அதில் குங்குமப்பூ விவசாயம் செய்து வருகிறார் சேஷாத்திரி. தண்ணீரும், மண்ணும் இல்லாமல் ஏரோபோனிக் முறையில் குங்குமப்பூ விளைவிக்கிறார் இளம் சிவில் இன்ஜினியர்.

மாடர்ன் டெக்னாலஜியுடன் கூடிய விவசாயம்

குங்குமப்பூ விவசாயம் குறித்து சேஷாத்திரி கூறுகையில், "மாடர்ன் டெக்னாலஜியுடன் கூடிய விவசாயம் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதன் அடிப்படையில் காஷ்மீரில் மட்டும் வளரக்கூடிய குங்குமப்பூ-வை விவசாயம் செய்யும் ஆசை ஏற்பட்டது.

புனே சென்றபோது குங்குமப்பூ விவசாயம் செய்வது குறித்து அங்குள்ள விவசாயிகளிடம் கேட்டறிந்து தெரிந்து கொண்டேன். புனேயில் இருந்து தான் பூண்டு வடிவத்தில் தோற்றமளிக்கும் குங்குமப்பூ கிழங்குகளை வரவழைத்தேன்.

குளிரூட்டப்பட்ட அறையில் வளர்ந்துள்ள குங்குமப்பூ பயிரை பார்வையிடும் சேஷாத்திரி

வீட்டின் மொட்டை மாடியில் குளிரூட்டப்பட்ட அறையில் காஷ்மீரில் உள்ளது போன்ற சீதோஷ்ண நிலையை ஏற்படுத்துவதற்காக விஞ்ஞான யுக்திகளை கையாண்டு வருகிறேன்.

ஈரப்பதத்தை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் இண்டெர்நெட் மூலம் இயங்கும் கருவிகளை பயன்படுத்தி வருகிறேன். ஈரப்பதம் மூலம் குங்குமப்பூ பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் வழங்கப்படுகின்றன.

225 சதுர அடியில் குளிரூட்டப்பட்ட அறை அமைத்துள்ளேன். வெளிச்சத்திற்காக விளக்குகள் மின்விளக்குகள் அமைத்துள்ளேன்.

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை குங்குமப்பூக்கள் விவசாயம் செய்யும் காலம் ஆகும். 4 மாதங்களில் வைலட் வண்ணத்தில் பூக்கள் மலரும். மலர்ந்த குங்கும பூக்களில் இருந்து அதன் சூலக இழைகளை கவனமாக சேகரித்து பிரத்யேக இயந்திரத்தில் அதை உலர்த்தி எடுக்கிறேன்.

ஒரு பூவில் மூன்று சூலக இழைகள் கிடைக்கும். தரத்தைப் பொறுத்து விலை மாறுபாடு உள்ளது. செயற்கை முறையில் சீதோஷ்ண நிலை ஏற்படுத்தி பராமரிப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் குங்குமப்பூ பயிரிட முடியுமா என்பதை குறித்து தற்போது பரிசோதித்து வருகிறேன்" என்றார்.

சேஷாத்திரி வெளியில் எங்காவது சென்றால் அவரது சகோதரி நித்யா குங்குமப்பூவை மேற்பார்வையிட்டு கவனித்துக் கொள்கிறார்.

பிரதமர் மோடி

ஒரு கிராம் குங்குமப்பூ-வுக்கு 300 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை தரத்துக்கு ஏற்ப விலை போகிறது. சுமார் 150 பூக்களில் இருந்து சூலக இழைகளை சேகரித்தால்தான் ஒருகிராம் குங்குமப்பூ உற்பத்தி செய்ய முடியும்.

நறுமண பொருள்களின் பட்டியலில் மிக உயர்ந்த விலைக்கு விற்கப்படுவது குங்குமப்பூ ஆகும். வயநாட்டில் குங்குமப்பூ விவசாயம் செய்யும் சேஷாத்திரி குறித்து மனதின் குரல் என்ற மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பேசியுள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "வயநாட்டில் குங்குமப்பூ விளைவித்துருப்பது, மனம் இருந்தால் செயல்படுத்த வழி பிறக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்" என பாராட்டியுள்ளார் பிரதமர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Maoists: ``ஆதிவாசி சமூகங்களை குறிவைப்பதை நிறுத்த வேண்டும்'' - அமித் ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்!

தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் எல்லையின் கரேகுட்டலு மலைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளைத் தேடிவந்தனர். கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே து... மேலும் பார்க்க

தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர்; மிரட்டும் அமெரிக்கா - இனி என்ன தான் ஆகும்?

2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், மூன்று ஆண்டுகள் கடந்து இன்று வரை தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளின் உதவி மற்றும் ஆதரவினால், சிறிய நாடான உக்ரைன் ரஷ்யாவை எத... மேலும் பார்க்க

``தேசத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்பவர்கள்..'' - ஜம்மு - கஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம்

ஜம்மு கஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டஹ்தில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரின் பெயர்களைப் படித... மேலும் பார்க்க

``வேளாங்கண்ணி கலைஞர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்..'' -சுற்றுலா பயணிகள் கோரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்று கொண்டாடப்படுகிறது. தென்னிந்திய அளவில் அதிக மக்கள் இங்கு அமைந்துள்ள கிறிஸ்தவ புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், வழிபட்டுச் செல்... மேலும் பார்க்க

அமைச்சரவை மாற்றம்: மீண்டும் அமைச்சராக பதவியேற்கும் மனோ தங்கராஜ்..

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு பரபரப்பாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் சர்ச்சையான பேச்சுகளாலும், அமை... மேலும் பார்க்க

Stalin: ``பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி..'' - அதிமுகவை கடுமையாகச் சாடிய ஸ்டாலின்

சட்டபேரவையில் இன்று ( ஏப்ரல்27) ஸ்டாலின் அதிமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். "எதிர்கட்சித் தலைவர் ஆதாரம் இல்லாத வகையில் பொத்தாம் பொதுவாக குற்றசாட்டுகளைச் சொல்லும் காரணத்தால் சில வி... மேலும் பார்க்க