செய்திகள் :

Padma Awards: ``மனுசனாகப் பிறந்தால் ஏதாவது சாதிக்கணும்..'' - பத்ம விருது பெற்ற செஃப் தாமு

post image

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு.

பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திலிருந்து 19 பேருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார் உள்ளிட்டவர்களுக்கு பத்ம பூஷண் விருதுகள் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூவால் வழங்கப்பட்டது. பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது.

 பத்ம விருதகளை பெற்ற தமிழர்கள்
பத்ம விருதகளை பெற்ற தமிழர்கள்

இந்த விருதைப் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செஃப் தாமு, "மனுசனாகப் பிறந்தால் ஏதாவது சாதிக்கணும்னு சொல்வாங்க. இந்த பத்மஶ்ரீ விருதப் பெற்றதை நான் சாதித்ததாக நினைக்கிறேன்.

நாட்டின் பெருமைமிகுந்த விருது. இது வாழ்நாள் சாதனை விருது. விருது வழங்க என் பெயரை அழைக்கும்போதே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது, உணர்ச்சி வசப்பட்டுப்போனேன் நான்.

அதுவும் எனது சமையல் துறையிலிருந்தே இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்குது. தமிழ்நாட்டிலிருந்து விருது வாங்கியவன் என்கிற முறையில ரொம்பப் பெருமையாக இருக்கு.

எதிர்காலத்தில் என்னைப்போல சமையல் துறையில் நிறையபேர் சாதனை செய்து, இதுபோல விருதுகளைப் பெற நான் ஒரு முன்னுதாரணமாக அமைந்திருக்கிறேன். இந்தவிருதை சமையல் கலைஞருக்கும், என்னுடைய மாணவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Padma Awards: அஜித் குமார், அஷ்வின், செஃப் தாமு, பறையிசை வேலு ஆசான்; பத்ம விருதுகளை பெற்ற தமிழர்கள்

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு. பல துறைகளிலும் ... மேலும் பார்க்க

Padma Awards: பத்ம பூஷண் விருதைப் பெற்றார் கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன்!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகளை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது மத்திய அரசு. பல துறைகளிலும் ... மேலும் பார்க்க

திமுக அமைச்சரவையில் தொடர்ந்து பந்தாடப்படும் வனத்துறை... என்னதான் பிரச்னை?

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் திண்டுக்கல் சீனிவாசன் வசம் இருந்த வனத்துறை, 2021 தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரா... மேலும் பார்க்க

``மிரட்டலுக்கு பயந்து தான் பங்கேற்கவில்லை..'' - மேடையில் குமுறிய கவர்னர்; ஊட்டி ராஜ்பவன் அப்டேட்ஸ்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மட்டுமே முதலமைச்சருக்கு உண்டு. கவர்னரே வேந்தராக தொடர்வார் எனக்கூறி ஆளுநர் மாளிகை தரப்பில் துணை வேந்தர்களுக்கான இரண்டு நாள... மேலும் பார்க்க

`திமுக-வுக்கு இவ்வளவு அடிமையாக திருமாவளவன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை..!’ - தமிழிசை சௌந்தரராஜன்

“ ‘2026 தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என அமித் ஷா சொல்கிறார். மறுபக்கம் எடப்பாடியோ ‘கூட்டணி ஆட்சி இல்லை’ என்கிறாரே?”``இந்த கூட்டணி அமைத்ததிலிருந்தே, தி.மு.க-வுக்கும் அதன் கூட்ட... மேலும் பார்க்க