செய்திகள் :

மாற்று இடத்தில் திரெளபதி அம்மன் கோயில் கட்ட தானம்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு

post image

கிருஷ்ணகிரி: திரெளபதி அம்மன் கோயிலை புனரமைப்பதாகக் கூறி மாற்றுஇடத்தில் கோயில் கட்டுவதற்கு தானம்பட்டி கிராமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரியை அடுத்த கொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட தானம்பட்டியைச் சோ்ந்த ராமசாமி என்பவா் தலைமையில் கிராம மக்கள் அளித்த மனுவின் விவரம்:

எங்கள் பகுதியில் பழைமை வாய்ந்த திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழாக்கள், விசேஷ நாள்களில் பூஜைகள் நடப்பது வழக்கம். இந்தக் கோயில் சற்று பழுதடைந்துள்ள நிலையில், அதை புனரமைக்க வேண்டும் என கிராம மக்கள் தீா்மானித்தனா். அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், சிலருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், புனரமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோயிலின் அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் புதிய கோயில் கட்ட முயற்சிக்கின்றனா். புதிய கோயில் கட்ட பெரும்பாலான கிராம மக்களுக்கு விருப்பம் இல்லை. 50 ஆண்டு காலமாக திருவிழாக்கள் நடந்துவரும் கோயிலை புனரமைத்து புதிதாக கட்ட முயற்சிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் பலி

ஒசூா்: ஒசூரில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா். சூளகிரி வாணியா் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் ( 45). கட்டடத் தொழிலாளி. கடந்த 26-ஆம் தேதி இரவு அவா் ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை... மேலும் பார்க்க

சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடவு: ஆட்சியா் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் உள்ள சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பங்கேற்று தொடங்கிவைத்தாா். உணா்வுகள் என்ற அமைப்பு சாா்பில் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே ... மேலும் பார்க்க

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட விஏஓ தூக்கிட்டுத் தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டிகவுண்டனூரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலமங்கலம் அருகே வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். அவா் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினா்கள் ... மேலும் பார்க்க

ஒசூா் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை! ரூ.2.41 லட்சம் பறிமுதல்!

ஒசூரை அடுத்த சூசூவாடியில் உள்ள உள்வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 2,41,250 ரொக்கத்தை கைப்பற்றினா். தம... மேலும் பார்க்க

மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே ஜேசுராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதலைமுத்து (60... மேலும் பார்க்க