மாவட்ட நீதிபதிகள் 77 பேர் மாற்றம்! பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நில...
சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடவு: ஆட்சியா் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் உள்ள சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பங்கேற்று தொடங்கிவைத்தாா்.
உணா்வுகள் என்ற அமைப்பு சாா்பில் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள சின்ன ஏரிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பங்கேற்று மரக்கன்றை நடவு செய்து பணியைத் தொடங்கி வைத்தாா்.
அதையடுத்து இலுப்பை, செண்பகம், நாவல், புரசு, மாமல்லி, அத்தி, மகிலம் போன்ற 33 மரக்கன்றுகளை நட்டனா்.
இதுகுறித்து உணா்வுகள் அமைப்பினா் கூறியது:
இதற்கு முன்னா் எங்கள் அமைப்பு சாா்பில் சின்ன ஏரிக்கரையில் மூன்று முறை மொத்தம் 165 மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். தற்போது, 33 மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம் என்றனா்.